அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு (படங்கள் இணைப்பு)
தகவலும், படஉதவியும் - டாக்கடர் ஹபீஸ்
திருகோணமலை மாட்டத்தில் கிண்ணியா தேசிய காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் சபருல்லாஹ் கான் தலைமையில் வெள்ளிக்கிழமை (3.8.2012) நண்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து கொண்டனர்.
கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கிய சந்திப்பொன்றின் போதே சட்டத்தரணிகள் இருவர் உட்பட அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
அமைச்சர் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஆகியோர் அவர்கள் கட்சியில் இணைந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அங்கு உரையாற்றுகையில் தேசிய காங்கிரஸ் அதிருப்தியாளர்களுக்கு தலைமை தாங்கிய சபருல்லாஹ் கான் கூறியதாவது,
முஸ்லிம்களின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிடுவதை நாங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம். பேரினவாத அடக்கு முறைகளுக்கு எதிராக பாடுபடவேண்டியது அவசியம். திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்போம் என்றார்.
இதேவேளையில் அமைச்சர் ஹக்கீம் மூதூருக்கு விஜயம் செய்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத்தின் தீவிர ஆதரவாளரான எஸ்.எம். ஜமீஸ் என்பவரும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
hehehe nalla comedy... athaullaku kinniyala aatharavaaa hhehehe ippathan nann kealvipaduran hahahah
ReplyDeleteawankalukku yenkathan aatheravu irunthu irukku
ReplyDelete