சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதியுடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு (படங்கள் இணைப்பு)
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கும்,இலங்கை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதி ஜான் எலக்ஸ் மைக்கல் தலைமையில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் போல் அடம்,புதுடில்லியிருந்து இயங்கும் இலங்கை உயர் ஸ்தானிகர் வெவன் விலியம் ஆகியார் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு முதன் முறையாக சீசல்ஸ் நாட்டின் உயர் மட்டத்திலான அரச தலைவர் ஒருவர் வருகைத் தந்தமை இதுவே முதற் தடவையாகும்.
சீசல்ஸ் நாட்டு சந்தையில் இலங்கை உற்பத்தி பொருட்களுக்க நல்ல சந்தை வாய்ப்புக்கள் காணப்படுவதால்,ஆபரணங்கள்,பிளாஸ்டிக் தயாரிப்பு பொருட்கள்,மரத்தளபாடங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சீசல்ஸ் நாட்டு ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வருகைத்தந்திருந்த சீசல்ஸ் நாட்டின் வர்த்தக அமைச்சர் போல்,அமைச்சர் றிசாத் பதியுதீனை கொழும்பில் சந்தித்து இலங்கை தயாரிப்பான படகுகளுக்கு சீசல்ஸ் நாட்டில் சிறந்த கிராக்கி காணப்படுவதாகவும்,இரு நாடுகளும் ஒன்றினைந்து தயார் செய்யப்படும் சுற்றுலா சார்ந்த பொதியினை சர்வதேச சுற்றுலாத் துறைக்கு விற்பளன செய்வதன் மூலம் இரு நாடுகளும் பெரும் நன்மையினை அடையும் என சுட்டிக்காட்டப்பட்டதையும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் நினைவுபடுத்தினார்.
Post a Comment