அக்குறணை + மடவளையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை (படங்கள் இணைப்பு)
TM.Hafees
கண்டி மாவட்டத்தில் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள் கலை கட்டிக் காணப்பட்டது. பிறைதென்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் மக்கள் இரவோடு இரவாக பொருட்களை கொள்வனவு செய்தனர். கடைகள் யாவும் நல்லிரவிற்குப் பின்னும் திறந்து வர்த்தக நடவடிக்கைகள் இடம் பெற்றன.
அதிகாலை நீராடி மணம் பூசி ஆண்களும் பெண்களும் சாரிசாரியாக தொழுகைக்காகச் சென்றனர். அக்குறணையில் பெருநாள் தொழுகை அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதாணத்தில் நடந்தது.
மடவளையில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையை அடுத்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உபதலைவரும் மடவளை பள்ளி பரிபாலன சபைத் தலைவருமான மௌலவி எம்.எச்.எம்.புர்ஹான் (பஹ்ஜி) குத்பா பிரசங்கத்தை நடத்தினார். இது ஜாமியுள் கைராத் ஜூம்மா பள்ளியில் இடம் பெற்றது.
Post a Comment