இம்ரான் கானுக்கு தலிபான் போராளிகள் கொலை மிரட்டல்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், அரசியல்வாதியுமான இம்ரான் கானுக்கு தலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான், அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து, ஆப்கன் எல்லையோரம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்த இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.
இந்த பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இந்நிலையில் இம்ரான் கான் ஊர்வலம் நடத்தினால் அவரை கொலை செய்வோம். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்க டிரோன் தாக்குதலை தலிபான்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், மதப்பற்று இல்லாமல் தன்னை இம்ரான் கான் மத சுந்திரவாதி என்றும் அரசியல் சுதந்திரவாதி என்றும் நடுநிலையாளர் என்றும் கூறி வருகிறார். முஸ்லிம் மதக் கொள்கைகளை பின்பற்றாத காரணத்தால் அவரை கொலை செய்வோம் என்று கூறியுள்ளனர். இத்தகவலை தலிபான் செய்தித் தொடர்பாளர் அசனுல்லா அசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Post a Comment