Header Ads



இலங்கையில் சீனாவின் இராணுவ பட்டாளம் (விபரங்கள் இணைப்பு)

 
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லியுடன், சீனப் படைத்துறையை சேர்ந்த ஜெனரல் தரத்துக்கு நிகரான பதவிகளை வகிக்கும் 11 உயர்அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர்.
 
ஒரே நேரத்தில் வெளிநாடு ஒன்றின் அதிகளவிலான அதிஉயர் மட்டப் படைஅதிகாரிகள் இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் சீனாவின் அதிஉயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 23 பேர் கொழும்பு வந்துள்ளனர்.
 
சிற்பபு விமானத்தில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்க கூட்டுப்படைகளின் தளபதி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
 
சீனப் பாதுகாப்பு அமைச்சருடன், 5 லெப்.ஜெனரல்கள், 3 மேஜர் ஜெனரல்கள், 1 வைஸ் அட்மிரல், 2 றியர் அட்மிரல்கள் என்று அதி உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வந்துள்ளனர்.

சிறிலங்கா வந்துள்ள சீனப்படை அதிகாரிகளி்ன் விபரம்,
 
லெப்.ஜெனரல் சூ லாய்கியாங் – சீன விமானப்படை பிரதித் தளபதி

லெப்.ஜெனரல் ஹுவாங் ஹன்பியாவோ – பெய்ஜிங் இராணுவ பிரதேச தலைமையக பிரதி தளபதி

லெப்.ஜெனரல் சொங் புசுவான் – நன்ஜிங் இராணுவ பிரதேச தலைமையக பிரதித் தளபதி

லெப்.ஜெனரல் லியு யுவேஜன் – லன்சோ இராணுவப் பிரதேச தலைமையக தலைமை அதிகாரி

லெப்.ஜெனரல் யங் ஜின்சான் – திபெத் இராணுவ தலைமையக தளபதி.

வைஸ் அட்மிரல் வங் டெங்பிங் – சீனக் கடற்படையின் தென்கிழக்குப் பிரிவு அரசியல் ஆணையர்.

மேஜர் ஜெனரல் யூ சிசின் – சீன இராணுவ ஹொங் கொங் பிராந்திய அரசியல் ஆணையர்

மேஜர் ஜெனரல் சொங் டான் – மத்திய இராணுவ ஆணைய பிரதி தலைமை அதிகாரி.

மேஜர் ஜெனரல் சாங் சூகுவோ – இராணுவ பிரிவுகளின் அரசியல் ஆணையர்

றியர் அட்மிரல் கன் லிகியூ – பொது அதிகாரிகளின் நடவடிக்கைத் திணைக்கள பிரதித் தலைவர்

றியர் அட்மிரல் குவான் யூபி – தேசிய பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகாரப் பணியக பிரதித் தலைவர்

மூத்த கேணல் காவோ ஹொங்லின் – ஆயுவுப் பிரிவு பிரதிப் பணிப்பாளர்

மூத்த கேணல் சாங் குய்பாவோ – பாதுகாப்பு பிரிவு பிரதிப் பணிப்பாளர்.

மூத்தகேணல் வூ சியாவோஜி – ஆசிய விவகாரப் பிரிவு பிரதிப் பணிப்பாளர்

கேணல் வங் பிங் – ஜெனரல் லியாங்கின் செயலர்.

கேணல் கூ ஹொங்ராவோ – ஆசிய விவகாரப் பிரிவு அதிகாரி-

மேஜர் ஜியாங் பின் - ஆசிய விவகாரப் பிரிவு

லெப்.லியு டா- ஜெனரல் லியாங்கின் பாதுகாப்பு அதிகாரி

லெப். சாங் ஹெங் – ஆசிய விவகாரப் பிரிவு அதிகாரி

சூ லிகுணா – மருத்துவர்

கேணல்  ஹுவாங் ஜிகுயான் – தகவல் பணியக அதிகாரி

மேஜர்  காவோ செங்லி – ஆசிய விவகாரப் பிரிவின் அதிகாரி

மேஜர் ஹுவாங் சியாவென் – ஊடகவியலாளர்.
 
இலங்கை  பயணத்தை முடித்துக் கொண்டு சீனப் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா, மற்றும் லோவோசுக்கும் செல்லவுள்ளார்.
 
 

No comments

Powered by Blogger.