கழுதையில் வெடிகுண்டு கட்டி தாக்குதல் - தலிபான்களின் புதிய தந்திரமாம்
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்திலுள்ள சர்சதா மாவட்டத்தில் போலீசாரைக் கொல்வதற்காக அங்குள்ள தலிபான்கள் ஒரு புதிய தந்திரத்தை உபயோகித்துள்ளனர்.
அதன்படி ஒரு கழுதையின் உடலில் வெடிகுண்டை கட்டிவைத்து, அதனை அங்குள்ள மாவட்ட தலைமைக் குடியிருப்புக்குள் அனுப்பியுள்ளனர். பின்னர் மாவட்ட போலீஸ் தலைவர் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் அந்த கழுதை வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் மூத்த காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தலிபான்கள் பயன்படுத்திய இந்த புது தந்திரத்தால், அந்த அப்பாவி கழுதையும் கொல்லப்பட்டது. மேலும் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் காரணம் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தலிபான்கள் இத்தகைய தந்திரத்தை உபயோகித்திருப்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளை அவர்கள் கொடூரமாக நடத்துவதையே காட்டுகிறது எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
Post a Comment