Header Ads



தவறு விட்டுள்ள பல்வேறு தரப்புக்களும், தண்டிக்கப்படும் ஒரு சமூகமும்..!



மஸிஹுதீன் இனாமுல்லாஹ்

1990 ஆம் ஆண்டு வடக்கின் ஐந்து மாவட்டங்களில்  இருந்தும்  இருபத்தி நான்கு மணி நேர கால அவகாசத்திற்குள் விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் மாத்திரம் விரட்டியடிக்கப் பட்ட போது உப்புக்குள முஸ்லிம்களும் தென்னிலங்கை நோக்கி இரவோடிரவாக இடம் பெய்ரந்தமை தெரிந்ததே, அன்று முதல் அவர்களது வாழ்வாதார தொழில் துறையான மீன்பிடியும்  கைவிடப் பட்டதால் அவர்களது மீன்பிடி வாதிகள் அமைந்துள்ள கோந்தைப்பிட்டி இறங்கு துறையும் செயலிழந்து இருந்தது.

1999 ஆம் ஆண்டு விடத்தல் தீவிலிருந்து உப்புக்குளத்துக்கு ஒண்பது கிலோ மீட்டார் தொலைவில் தோட்டவெளி என்ற பிரதேசத்தில் இடம் பெயர்ந்து குடியேறிய  ரோமன் கத்தோலிக்க  தமிழ் மீனவர் சமூகம் முஸ்லிம்களால் கைவிடப் பட்டிருந்த கோந்தைப்பிட்டி இறங்கு துறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி  புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசு செய்து கொண்ட மோதல் தவிப்பு உடன்படிக்கையின் பின்னர் ஒரு தொகுதி உப்புக்குள முஸ்லிம்கள் தமது வதிவிடங்களுக்கு மீண்டு வந்த பொழுது தமது  கோந்தைப்பிட்டி மீன் பிடி இறங்கு துறை மீதான தமது உரிமையை  கோரி நின்றனர், அப்பொழுது அந்தப்  பிரதேச கடற்புலிகளின் தலைவராக இருந்த அமுதன் தலையீட்டில்  உப்புக்குள மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களையும் விடத்தல் தீவு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி கடற்புலிகளின் செயற்பாடுகளுக்காக அப்போது உபயோகத்திலிருந்த விடத்தல் தீவு இறங்குதுறை தமிழ் மீனவர்களிடம் திருப்பிக் கையளிக்கப் படும் வரை தற்காலிகமாக மனிதாபிமான அடிப்படையில் கோந்தைப் பிட்டி இறங்குதுறையில் தமது வாடிகளை அமைத்துக் கொள்வதற்கான உடன் படிக்கை ஒன்றில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.

 1996 ஆம் ஆண்டின் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் தொடர்பான இரண்டாம் இலக்க கட்டளைச் சட்டத்தின் 44 ஆம்  பிரிவுக் கேற்ப மீனவர் பிணக்குகளை தீர்க்கும் அதிகாரம் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அதிகார சபையின் பணிப்பல்ருக்கே வழங்கப் அப்ட்டிருப்பதால் 2005 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம்  திகதி தமிழ் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலையீட்டில் உப்புக்குள மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுடன் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஒரு கலந்துரையாடலை நடாத்தி இன்னும் சிறிது காலம் விடத்தல் தீவு மீனவருக்கு கோந்தைப்பிட்டி இறங்கு துறையை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப் பட்டது.

 அதைத்தொடர்ந்து மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஜூன் 15, 2006 அன்று  மீன்பிடித்துறைமுகங்கள் திணைக்களம்  கோந்தைபிட்டி இறங்கு துறையை விடத்தல் தீவு மீனவர்கள் மேலும் சிறிது காலம் உபயோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்கியது.

நவம்பர் 26, 2006 அன்றும் தொடர்ந்து மார்ச் 19  2007  ஆகிய தினங்களில் மன்னர் மாவட்ட அரச அதிபர் தலைமையில்  பிரதேச செயலாளர் மற்றும் மீன்பிடி நீர் வளங்கள் அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ,உப்புக்குள மற்றும் விடத்தல் தீவு மீனவர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கூடி மீண்டும் மீண்டும் விடத்தல் தீவு மீனவருக்கு அனுமதி வழங்கும் உடன்படுகளே எய்தப் பட்டன.

 மார்ச் 07 , 2011  அன்று உப்புக்குள மீனவர் சங்கம் மீன்பிடிக் கைத்தொழில் அமைச்சர் திரு ராஜித சேனா ரத்னா  அவர்களிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து நவம்பர் 03 , 2011  சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும் வரவழைத்து கலந்துரையாடியபின் நவம்பர் 30 ,2011 இற்குள் விடத்தல் தீவு மீனவர் தமது விடத்தல் தீவு இறங்குதுறைக்கு சென்று மீன்பிடி தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோந்தைப் பிட்டி இறங்குதுறை உப்புக்குள மீனவர்களிடம் கையளிக்கப் பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப் பட்டது, ஆனால் விடத்தல் தீவு மீனவர் கோந்தைப் பிட்டி இறங்கு துறையிலிருந்து வெளியேறவில்லை.

பிணக்குகள் தொடரவே  மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் தலையிட்டு ஜூன் 07 , 2012 அன்று சகல தரப்பினரையும் அழைத்து பேசியதில் விடத்தல் தீவு மீனவர் தமக்கு தோட்டவெளி குடியிருப்புகளுக்கு அருகாமையில் மாற்று இடத்தை ஒதுக்கித் தந்தால் கோந்தைப் பிட்டியிலிருந்து   வெளியேறுவதாக உத்தரவாதமளித்தனர், அதன் படி மான்னார் அரச அதிபர் பிரதேச செயலாளர் ஜூன் 11 , 2012 அன்று இடம்பெற்ற கூட்டத்தில் பள்ளிமுனை மற்றும் பணங்ககட்டிகொடு பிரதேசத்தில் மாற்று இடம் தமிழ் மீனவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப் படுவதற்கும், அந்த இறங்குதுறை  மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் பணிப்பாளரினால் அளவீடு செய்யப் பட்டு பிரித்துக் கொடுக்கப் படும் வரைக்கும் தமிழ் மீனவர்கள் விடத்தல் தீவுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது.

எனினும்  தொடர்ந்தும் கோந்தைப் பிட்டியிலிருந்து  தமிழ் மீனவர் வெளியேற மறுத்ததால் ஜூன் 26 , 2012 அன்று மன்னார் மாவட்ட அரச அதிபர் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் தமிழ் முஸ்லிம் மீனவர் சமூக பிரதிநிதிகள் கூடி பள்ளிமுனை பணங்ககட்டிகொடு துறைகளில் இருந்து தற்காலிகமாக மீன்பிடியை மேற்கொள்ளுமாறும் கொந்தைப்பிட்டியிளிருந்து வெளியேறுமாறும் விடத்தல் தீவு மீனவர்களுக்கு தெரிவிக்கப் பட்டது.


மேற்படி உத்தரவுகளை புறக்கணித்து தொடர்ந்தும் கோந்தைப் பிட்டியிலிருந்து  கடற் தொழில் செய்த விடத்தல் தீவு மீனவருக்கு எதிராக ஜூலை 13 , 2012அன்று கோந்தைப் பிட்டி இறங்குதுறையில் உப்புக்குள மீனவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர், ஆத்திரமுற்ற சிலர் விடத்தல் தீவு மேஎநவ்ர்கல்து படகுகளுக்கும் மீன்பிடி உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்ததாக போளிசிசில் செய்யப்பட முறைப்பாடுகளைத்  தொடர்ந்து ஜூலை 16 ,2012 அன்று விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார் 396/ 2012 இலக்க "பீ"  அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்  
  .

 அதைத் தொடர்ந்து இரு தரப்பினையும் நீதிமன்றத்துக்கு வருமாறு  நீதிபதி அழைப்பை விடுத்தபோதும் உப்புக்குள மீனவர் நீதிமன்றத்திற்கு செல்லாத நிலையில் விடத்தல் தீவு மீனவர் தொடர்ந்தும் கோந்தைப் பிட்டி இறங்கு துறையிலிருந்து  மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அவர்களுக்கு பொலிஸார் பாதுகாப்பை வழங்குமாறும் உத்தரவைப் பிறப்பித்தார்.
அப்பொழுது பொலிஸார் மேலும் மூன்று உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிபதியை வேண்டிக் கொண்டனர் :

01 ) அமைதி ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் உப்புக்குள மீனவர் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.  02 ) கூடிய விரைவில் அரசாங்க அதிபரும், பிரதேச செயலாளரும் விடத்தல் தீவு மீனவ்ருக்கான மாற்று இறங்கு துறைக்கான இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
03 ) மாற்று இடம் கிடைக்கப் பெற்ற உடனேயே தமிழ் மீனவர் கோந்தைப் பிட்டியிலிருந்து வெளியேற வேண்டும்.  என்றாலும் அது குறித்த முடிவை எடுக்க ஜூலை 18 ஆம் திகதி இரு தரப்பினருக்கும் நீதி மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவைப் பிறப்பித்தார்.

ஜூலை 18, 2012 அன்று மான்னார் நீதிபதியின் விடுத்த அழைப்பை ஏற்று விடத்தல் தீவு மீனவர் பிரதிநிதிகளும் ,உப்புக்குள மீனவர் சார்பாக சட்டத்தரணி ஒருவரும் நீதி மன்றம் சென்றிருந்தனர், அன்று முஸ்லிம் சிவில் தலைமைகள் பெண்கள் சிறார்கள் என அந்தப் பிரதேச முஸ்லிம்கள் சுமார் நீதி மன்றிலிருந்து 200  மீட்டர் தொலைவில் தமக்கு நீதி வேண்டி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டார்கள், ஆர்ப்பாட்டக் காரர்களை கலைக்குமாறு நீதிபதி ஜூட்சன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார், ஆனால் அவர்கள் களைந்து செல்ல மறுத்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் நீதிபதி நீதி மன்றிலிருந்து வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டோர் மீது கண்ணீர்ப் புகை பிரயோகித்து அல்லது முழங்காலுக்கு கீழ் சுட்டு கலைத்து விரட்டிய்டிக்குமாறு   உத்தரவிடவே ஆத்திரமுற்ற சிலர் கற்களை வீசி எறிந்துள்ளனர், நீதிமன்றத்தின் மீதும்  கற்கள் வீழ்ந்துள்ளதால் ஆர்ப்பாட்டக் காரர்கள் நீதி மன்றின் மீது தாக்குதல் நடாத்தியதாக நீதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அங்கு பதற்றம் நிலவிக் கொண்டிருந்த பொழுது அமைச்சர் ரிஷாத் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசியில் அழைத்து "இவை நடக்கும் என நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லவில்லையா..இன்று மன்னர் பற்றி எரிகிறது இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று " அச்சுறுத்தியதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.  ஆனால் அமைச்சர் ரிஷாத் பதயுதீன் அவர்கள் தனக்கு அந்த நீதிபதியை தனிப்பட்ட முறையில் தெரியாது நான் அவருக்கு எந்த ஒரு கட்டத்திலும் தொலை பேசியிலோ நேரடியாகவோ கதைத்ததில்லை என திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.

இப்பொழுது எழுந்துள்ள கேள்விகள் :

01 )   ஜூலை 13 ஆம் திகதி  கோந்தைபிட்டி இறங்குதுறையில் ஏற்பட்ட கலகம் தொடர்பில் விசாரணை செய்த நீதிபதி மீனவர் பிணக்கு தொடர்பாக மீன்பிடி நீர் வளங்கள் சட்டத்தின் 44 ஆவது பிரிவிற்கிணங்க மீன்பிடித்துறை பணிப்பாளர் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பிற்கு முரணான ஒரு தீர்ப்பை ஜூலை ௧௬ ஆம் திகதி நீதிபதி எந்த அடிப்படையில் வழங்கினார்..அதாவது விடத்தல் தீவு மீனவர் தொடர்ந்தும் கோந்தைப்பிட்டி இறங்குதுறையில் மீன் பிடிக்க அனுமதிக்குமாறும் அதற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்குமாறும் ஏன் தீர்ப்பளித்தார்..?

02 ) கடந்த பத்து வருடங்களாக இந்த பிணக்கில் தலையிட்டு தற்காலிகமாக மீன்பிடிக்க அனுமதி பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று செயற்பட்ட தமிழர் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலனாதனோ அல்லது வேறு தமிழ் அரசியல் தலைமைத்துவமோ ஏன் இந்த விசயத்தில் தலையிட்டு விடத்தல் தீவு மீனவரை அவர்களது இறங்கு துறைக்கு செல்லுமாறு வலியுறுத்த வில்லை.

03 ) அமைச்சர் ராஜித தலைமையில் மார்ச் 26 , 2011 அன்று கூடி எடுக்கப் பட்ட தீர்மானங்களை அமுல்  படுத்த ஏன் அதிகாரிகளும், பொலிசாரும், சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பானவர்களும் தவறினார்கள்.

04 ) விடத்தல் தீவு மீனவர்கள் அவர்களது பூர்வீக இறங்கு துறை இன்று மீன்பிடிக்கு உகந்த சுமுகமான நிலையில் இருக்க அவர்கள் அங்கு திரும்பிச் செல்லாது தடுக்கின்ற சக்திகள் எவை.?

05 ) மக்கள் பிரதிநிதியொருவர்  நீதிமன்ற வளாகத்தில் இடம் பெறுகின்ற ஒரு கலகம் குறித்து நீதிபதியுடன் கதைப்பது நீதி மன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதாகுமா? ஒரு பாட சாலை முன் இடம் பெறுகின்ற கலகம் குறித்து அதிபருடன் பேசுவது கற்பித்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதாகுமா?

06)  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒருவர் தன்னுடன் தொலை பேசியில் கதைத்ததி வைத்து அவர் தான் அந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தினார் என முடிச்சு போட்டு   அவரை கலகத்திற்கான  பிரதான சந்தேக நபராக அடையாளப் படுத்து வது எந்த இயற்கை நீதிகளுக்கு முரணில்லையா?

07 ) மன்னர் மாவட்ட சிவில் தலைமைகள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் சார்பாக மன்னர் மாவட்ட மார்க்க அறிஞர்கள் அமைப்பு அமைச்சர் ரிஷாத் பதீயுதீனுக்கும் தமது ஆர்ப்பாட்டத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ஊடகங்களுக்கும் உரிய தரப்பினருக்கும் தெரிவித்த பின்னரும் பூர்வாங்க விசாரணைகள் நிறைவடையா முன்னர் சட்டத்தரணிகள் சங்கம்  தங்களுக்குள் அரசியல் வேறுபாடுகளை முற்றாக மறந்து எந்த நியாயத்தின் அடிப்படையில் அமைச்சரை கைது செய்யுமாறு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடு பட்டனர்..?

08 )  ஒரு அரசியல் தலைவருடன் தொடர்பு பட்ட ஒரு விவகாரத்தை விசாரணைக்கு எடுக்க நாள் குறிக்கும் பொழுது நாட்டில் அமுலில் உள்ள தேர்தல் சட்ட விதிகளை நீதி மன்றங்கள் கவனத்தில் எடுப்பதில்லையா?

7 comments:

  1. Risat ay kaithu seyvathinal pirachchinai theernthu viduma?? ayoob in katturai il nanraka therinthathu.pirachchinai ay thisaithiruppuwathatkaha seyyappadum velai niruththaththai muriyadippoam.

    ReplyDelete
  2. நல்லதொரு தகவல்,உண்மையினை தெளிவாக விளக்கப்படுத்தியுள்ளீர்கள்,கடற்றொழில் திணைக்களத்தனி சட்டம் ஒன்றிருக்க அதனை மீற் மன்றங்கள் தமது ஆதிக்கத்தை செய்தமைக்கு எதிராக வழக்கொன்றை தொடரலாம் என நான் என்னுகின்றேன்.தங்களது ஆலோசனை மிகவும் பொருத்தமானது, கஅமைச்சர் றிசாத் கலங்கமற்றவர்,அவரைப்பற்றி நீங்கள் தனிப்ட்ட முறையில் நன்கு அறிவீர்கள் என்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.
    1-நீதிபதி ஜூட்சனுக்கு எதிராக வழக்கு தொடருவோம்.
    2.மன்னார் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக வழக்கு தொடருவோம்,
    3.கடற்றொழில் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடருவோம்

    இந்த வழக்குகள் விசாரகிக்ப்படுமா ?.......

    ReplyDelete
  3. mannar neethipathium aayarum avarin adivarudigalum naasamaga powargal.
    1. mannar aayar puligalin vaal enpathu mattumalla var puligalukkum muslimkalukkum idaiel kurothathai valaththavar
    2. 1990 musligal veliyeriyavuda mannaril munbu kadaigal iruntha idam erikkapatta pinnar pattina sabaikku sonthamana kaniyai palathkaramaga eduthu athil thevalayam kattiya chandiyar
    3mannar sannar kani thodarpaga valakku vaikkamal makkalai thoondi vittu chandithanam kaattiyavar aayar... ippadi thodaralam avarin chandithanaththai
    4. mannar annethipathi munnal neethaipathi ilam cheliyeninal siparisu moolam neethipathi aginavar
    5. aneethipathi joodson munnar puligalin satta thuragalil thodarpu pattavar
    6. MULIGALUKKU ETHIRAGA SEYTPADUM JOODSANAI VAITHU INNUM ATHE VALAKKUGALAI VISARIPPATHU NEETHI THURAKKU ALAGALLA...
    7, KOURAVA AMAICHARUKKU ETHIRAGA VALAKKU VAITHU VITTU ...muttal karuppu angikal avarai kaithu seiya solvathal antha muttal karuppu angikal neethi thuraiyai keli koththaki avamana paduthugirargal.
    8. moththathil mannar musligalukku BLACK AND WHITE ethirigal athavathu black enbathu vanguroththu vakkeelgal white enbathu puli vaalum thuvesiumana aayar.

    ReplyDelete
  4. ithai vaasippavargalidam oru kelvi

    1. amaicharukku ethirga valakkuu vaithu vittu athatkana visaranai mudinthu theerpu varuvarai porukkamal...... ethatkaga innum pagishkarippuukalum amaicharai kaithu sei enra oolaigalum. ithaivida mannaril kaluthaigal parava illai pola thonruginrathu. ithilirunthu joodasaninathum aayarinathum avargalin adivarudigalin pirachinai enna venbathu engalukku thelivaaga vilangugirathu

    ReplyDelete
  5. munbu mathavachchi irunthu mannar varum varaikkum pathaigalil indu kovilgalai kaana mudium aanal ippothu athatku pathilaga christhava vikragangalaithan kaanamudigirathu.. vadakkil innum makkalukku pirachinai iruppathaga kaattikondu thaai naattai anniyanukku kaatti kodukkum navveena kkakai vanniyanthan intha mannar aayar. vanni makkalukkaga muthalai kanneer vadikkum aayar angulla appavi makkalai christhavargalaga maatru vathileye munmuramaga irukkiraar. mannaril ulla NGO ellame aayarin attagasa alosanaiudan iyangupavaithaitha, ivargal puligalukku paal ootti valarthavargal, makkal viduthalaikkaga alla matha viduthalakkaga

    ReplyDelete
  6. mr. joodsan and mr aayar . ilangai varalaatrai mooru varudam pinnokki paarungal.... naagal than ulagin palam porunthiya veerargal engalai vittal yaarum illai enru sonnavargal ellam UNDER WEAR udan kaanamal poivittargal,, neengalaum oru naal karuppu uduppai kanom vellai uduppai kanom enru ooda vaika iraivan irukkiran

    ReplyDelete
  7. aayarum avarin jood SON irukkum varai mannaril kristhava adavadi thodarum

    ReplyDelete

Powered by Blogger.