Header Ads



அக்கரைப்பற்றில் மு.கா. ஆதரவாளர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்

TM
 
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களினான ஹஸன் அலி, எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் வாகனங்கள் மீது அக்கரைப்பற்றில் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
 
இன்று மாலை, மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிக்கொண்டிருந்தபோது, அக்கரைப் பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காயம் எதுவும் ஏற்படாத போதிலும் அவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலுக்கு தேசிய காங்கிரஸ் மீது அவ்வட்டாரங்கள் குற்றம் சுமத்தின.
 
இச்சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேட்பாளர்களும் அக்கரைப் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டனர்.
 

No comments

Powered by Blogger.