''தமிழர்கள் முதலில் தமிழர்களுடன் சமரசம் பேணவேண்டும்''
தீர்வுகளை கேட்பது சுலபம். ஆனால் மானிடர்களுக்கான தீர்வினைக் கேட்கும்போது அது அவசரமாக தீர்க்கக்கூடிய ஒன்றல்ல. எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச பிரச்சாரங்கள் யதார்த்தத்தில் தமிழர்கள் சரியாக எவ்வாறு பிளவுபட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய பாகங்களை எடுத்துக் காட்டியுள்ளன. எல்.ரீ.ரீ.ஈ அதன் பெருந்தொகை அமெரிக்க டொலர் வருட வருமானத்தை, தனது சொந்த மக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஆசைப்பட்ட பிரதேசங்களை மேம்படுத்த ஏன் பயன்படுத்தவில்லை, என்கிற கேள்வியை எழுப்ப அநேகமானோர் அக்கறை காட்டுவதில்லை. எல்.ரீ.ரீ.ஈயினருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய பதுங்கு குழிகளையும் மற்றும் வீடுகளையும் கட்டுவதைத் தவிர உண்மையில் வேறு எதுவுமே செய்யப்படவில்லை. எல்.ரீ.ரீ.ஈ ஆட்சி செய்த காலம் முழுக்க வடபகுதிக்கு உணவையும் மற்றும் மருந்து வகைகளையும் ஸ்ரீலங்கா அரசாங்கமே அனுப்பி வந்தது. தமிழர்கள்(எல்.ரீ.ரீ.ஈயின் செழிப்பான காலப்பகுதியில் தமிழர்களை கட்டுப்படுத்தியவர்கள்) எதை விரும்புகிறார்;கள் மற்றும் தமிழர்களுக்கு என்ன தேவைப்படுகிறது (எல்.ரீ.ரீ.ஈ, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் கையில் அகப்பட்டு துன்பப்படும் தமிழர்களுக்கு) என்பனவற்றுக்கு இடையே பாரிய வித்தியாசம் உள்ளது என்பதை உலகம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம்.
கீழே தரப்பட்டுள்ள சில சம்பவங்களைப்பற்றி தமிழ் மற்றும் ஆங்கில பிரதான ஊடகங்களில் வெகு அரிதாகத்தான் சில பகுதிகள் இடம்பெற்றிருந்தன, ஒரு தமிழர் அல்லாதவர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்கள் மேலும் கீழுமாக தாண்டிக் குதித்திருப்பதோடு உலகளாவிய ரீதியில் உள்ள இணையத்தளங்களை இந்தச் செய்திகள் பற்றிய குறிப்புகளாலும் படங்களாலும் மூழ்கடித்திருப்பார்கள். இந்த மௌனத்துக்கான காரணம் என்ன என்று நாங்கள் கேட்கிறோம்.
ஜூலை, 1, 2012 – கிரிலப்பனையை சேர்ந்த ஒரு 7வயது தமிழ் சிறுமி தமிழரான அவளது மாமனாராலும் மற்றும் இரண்டு ஆண்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் ஒரு சாக்கடை கால்வாயினுள் அமிழ்த்தப்பட்டுள்ளார். இதிலிருந்து வெளிப்பட்டிருப்பது, குற்றவாளிகளால் அந்தச் சிறுமி ஒரு மாதத்துக்கு மேலாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு வந்துள்ளார் என்று.
26. ஜூலை 2012 – 31 வயதான தமிழ் பெண் தொழிலதிபர், வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தொங்குவதாக அவரது காதலர் அறிவித்துள்ளார். தமிழரான வீட்டு வேலை செய்யும் அந்தக் காதலர், அவளது பெற்றோர்களிடமும் வேலை செய்து வந்துள்ளதாகவும், திருட்டு சம்பந்தமான பல தொடர் வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அவளது பெற்றோர் அவளைவிட 15 வயது மூத்த செல்வந்தரான ஒரு தொழிலதிபருக்கு அவளை மணம் செய்து கொடுத்து அதன்மூலம் அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தபின், அவளது கணவருக்கு முந்திய திருமணம் ஒன்றின் மூலம் 3 பிள்ளைகள் இருப்பதாக கண்டு பிடித்துள்ளாள். அதனால் அவர்கள் பிரிந்தபின்னர், அவளது முன்னாள் காதலரான வீட்டு வேலைக்காரனுடன் அவள் மீண்டும் சோந்துள்ளாள்.
29, பெப்ரவரி 2012 – ஒரு 48 வயதான தமிழ் பெண், கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்துகிடக்க காணப்பட்டாள். அவள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.
மே,2012 – ஊர்காவற்றுறை காவல்துறையினர் 80 வயதான தனது தாயாரின் கழுத்தில் கல்லைக் கட்டி அவரை கிணற்றுள் தள்ள முயற்சி செய்ததற்காக ஒரு மனிதரை கைது செய்துள்ளனர். ஏனெனில் அவரது தாய் அவருக்கு தொந்தரவாக உள்ளாராம். அந்த சந்தேக நபர் எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதப் பிரிவில் ஒரு அங்கத்தவராக இருந்தவராம்.
19 ஆகஸ்ட் 2012 – தமிழர் ஒருவர் 58 வயதான தந்தை, தாய்,மற்றும் 23 வயதான தங்கை ஆகியோரை, வெள்ளவத்தையில் உள்ள குடியிருப்பொன்றில் வைத்து கொலை செய்துள்ளார்.
மேலும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர், எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதங்கள் வைத்திருந்த சகல தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களைவதற்கு வெகுதுர்ரம் முயன்று வருகின்ற அதேவேளை அந்த குழுக்களிடையே தோன்றும் பலவித சண்டைகள் காரணமாக மரணங்களும் மற்றும் காயங்களும் ஏற்பட்டு வருகின்றன. கும்பல்கள் இப்போது, வழிப்பறி, சூறையாடல், கடைகளை திருடுவது, தமிழர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ள எல்லா நாடுகளிலும் தமிழ் குழுக்களின் வன்முறைச் சம்பவங்கள் குறிப்பாக எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டிருக்கின்றன. எந்த வித மிகைப்படுத்தலும் இன்றிச் சொல்லுவதானால், கறுப்பர்களால் பாரம்பரியமாக ஆளப்பட்டு வந்த பல நகரங்களில் இந்த கடனட்டை மோசடி போன்ற தீய நடவடிக்கைள் பலவற்றை செய்து வருகின்றன.
இப்போது வெளிநாடுகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான தமிழர்களுக்கு பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதை அளவிடுவது அத்தனை கடினம் அல்ல. யாராவது வெள்ளவத்தை பகுதியில் பொருட்கள் வாங்கச் சென்றால் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள், பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் விலையுயர்வான இடம் அதுதான், காய்கறிகள் வாங்குவதற்குகூட அங்கு யாரும் பேரம் பேசுவதில்லை, சில கடைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தது, சில வாடிக்கையாளர்கள் தங்கள் மீதிப் பணத்தை பெறுவதற்குகூட காத்திருப்பதில்லை என்று. இதன் சாதரண கருத்தாக விளக்கப்படுவது, கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும்; வசிக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தினரதும் குறைந்தது யாராவது ஒருவராகிலும் இப்போது வெளிநாட்டில் வாழ்கிறார்கள் என்பதுதான், அவர்களில் பலர் மறக்கக்கூடாதது, அவர்கள் அதற்காக நன்றி சொல்ல வேண்டியது எல்.ரீ.ரீ.ஈக்கு தான் என்று.
இங்கேதான் பிடி உள்ளது. தமிழர்கள் எந்த சாதியையோ அல்லது வகுப்பையோ சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஸ்ரீலங்காவின் மோதல் இப்போது முடிவடைந்ததையிட்டு ஒரு உள்ளார்ந்த நன்றியை செலுத்துகிறார்கள், ஏனெனில் தாங்கள் முன்பிருந்த சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்து காரணமாக எல்.ரீ.ரீ.ஈயினரை தட்டிக் கழிக்க முடியாதிருந்த நிலை மாறியிருப்பதையிட்டு, இருந்தாலும் அவர்கள் ஒரு தனிநாட்டை கோரினார்கள் என்பது இதன் அர்த்தமாகாது. இந்த சங்கடமான நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையை குழப்பத்திலாக்குவது, எல்.ரீ.ரீ.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் வருடாந்தம் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை வருமானம் ஈட்டுகிறது மற்றும் அதன் சர்வதேச கூட்டு நடவடிக்கைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் பணக்காரர்களாக மாறியதுடன், சர்வதேச கண்ணோட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு பிரதிநிதிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நபர்கள் 30 வருட காலமாக தாங்கள் அனுபவித்து வந்த சலுகைகளையும் மற்றும் சிறப்புரிமைகளையும் விட்டுக் கொடுப்பதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளனர். இதன் காரணமாகத்தான் அவர்கள் சிங்கள – தமிழ் பாகுபாட்டு கருத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புவதுடன், தங்கள் சட்டவிரோத பணத்தை பயன்படுத்தி கட்டுக்கதைகளை கிளப்பவும் வெளிநாட்டு அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கவும், மற்றும் வயது முதிர்ந்த முன்னாள் போர்க்குற்றவியல் வழக்கறிஞர்களை கொண்டு வினோதமான மந்திராலோசனை சபைகளை உருவாக்கவும் முயல்கிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள இந்த தமிழர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீலங்காவில் கால்பதித்ததோ அல்லது சாதாரண தமிழ்மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக ஒரு சதமேனும் அனுப்பியதோ கிடையாது, ஆனால் வடக்கிலுள்ள இராணுவ பிரசன்னத்தை அகற்றும்படி கூக்குரலிடுகின்றனர், அதேவேளை கரவெட்டியில் உள்ள தமிழர்கள் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியிடம் தமிழ் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணருவதால் இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கும்படி வேண்டுகிறார்கள். இதே உணர்வைத்தான் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி, ஒரு கௌரவ பேச்சாளராக ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்தபோது வெளிப்படுத்தியிருந்தார். எனவே ஸ்ரீலங்காவுக்கு ஒருபோதும் வந்திராத தமிழர்களையா அல்லது இராணுவத்தின் மத்தியில் வாழும் தமிழர்களையா நாங்கள் நம்புவது? முல்லைத்தீவு போன்ற வடக்கின் உட்புற நிலப்பகுதிக்கு ஒருவர் ஆழமாகச் சென்றால், ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அடைந்திருக்கும் பிரபல்யம் ,சர்வதேச ரீதியாக ஸ்ரீலங்காமீது எதிர்ப்பு காட்டிவரும் எவரையும் பேசமுடியாமல் பொறாமையால் முகம் சுளிக்க வைக்கும்.
அநேகருக்கு, விசேடமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவு தேடும் வீரர்களுக்கு தெரியாதது, தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று சேருவதை ஊக்குவிக்க முடியாதபடி தங்களுக்குள் பெருமளவில் பிளவுபட்டுள்ளார்கள் என்கிற யதார்த்தத்தையே.
அந்தப் பிரிவுகள் பல்வேறு வகையானவை – அங்கு சாதிப் பாகுபாடு உள்ளது. ஒரு சிறு தொகையான வெள்ளாளர்கள் தொடர்ந்தும் முழுத் தமிழ் சனத்தொகைமீதும், ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். ஆட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடையே அவர்களை நீங்கள் காணலாம். மற்றும் அவர்களின் தேர்தல் வெற்றிகள் காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து வாக்குகளைப் பெற்று வருவதைப் போன்றது, காந்தியின் நாய் தேர்தலில் நின்றால்கூட அதுவும் மாபெரும் வெற்றி பெறும் என்று சிலர் சொல்வதுண்டு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்(ரி.என்.ஏ) எல்.ரீ.ரீ.ஈயின் காலம் முழுவதும் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்று மட்டும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஒருவர்கூட வடக்குக்கு செல்வதற்கு துணியவில்லை, தமிழ் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை சிறுவர் போராளிகளாக மாற்றவேண்டாம் என்று ஒருவர்கூட எல்.ரீ.ரீ.ஈயிடம் விண்ணப்பிக்கவில்லை. ரி.என்.ஏ அரசியல்வாதிகள் மௌனமாக இருந்தது ஏனென்றால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் கொழும்புத் தமிழருடையதோ அல்லது உயர்சாதியினருடையதோ அல்லர், ஆனால் வறுமைப்பட்ட தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என்பதால். ஸ்ரீலங்கா இராணுவம் காப்பாற்றிய 297,000 தமிழ் குடிமக்கள் விடயத்திலும் இதுதான் உண்மை.
சாதி வித்தியாசம் அப்படியானது. எந்த உயர்சாதிக்காரரும் தாழ்ந்த சாதிக்காரருடன் ஒரு குவளையைத்தானும் பங்கிட்டுக் கொள்ளமாட்டார்கள் என்பதை நீங்கள் காணலாம். நிச்சயமாக வௌ;வேறு கரண்டிகளும் கத்திகளும் கூட பயன்படுத்தப்படலாம். தமிழர்கள் தங்கள் சாதி வித்தியாசம் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்பாததால் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு ஆபத்தான வேளைகளில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் இரத்ததானம் செய்துவருகிறார்கள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளக்கூட எத்தனைபேர் கவனம் செலுத்துகிறார்கள்.
எனினும் 30 வருடங்கள் ஒரு நீண்ட காலம் மற்றும் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொண்டார்கள், இப்போது அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரம் மற்றும் பணம் என்பனவற்றைக் கொண்டு தங்களுக்கு தங்கள் சாதியின் காரணமாக மறுக்கப்பட்ட இடத்தை பெறுவதற்காக தங்கள் மக்களுடனேயே போட்டியிட அவர்கள் தயாராக உள்ளார்கள். இப்பொழுது ஸ்ரீலங்காவுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களிடையே இவர்களை தெரிவு செய்வது சுலபம். இளைஞர்கள் காதில் கடுக்கன் அணிந்திருப்பார், இளம் பெண்கள் மைக்ரோ மினி பாவாடைகளை அணிந்திருப்பார்கள். ஒரு காலத்தில் நாணத்துடன் நடந்து கொண்ட தமிழ் பெண்கள் இப்போது அரைக் காற்சட்டைகளை அணிய வெட்கப்படுவதில்லை. அத்துடன் அனைவரும் புரிந்துகொள்ள முடியாத உச்சரிப்புகள் கொண்ட ஆங்கிலத்திலும் அதேபோல புரியாத மொழிகளிலும் பேசிக் கொள்கிறார்கள்.
இன்னும் அதிகமாகச் சொல்வதானால் தமிழர்கள் இப்போது அனுபவிக்கும் எல்லையற்ற சுதந்திரத்துக்கு ஸ்ரீலங்காப் படைகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். படைகளால்கூட அவாகளின் சுதந்திரத்தை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறையினரின் புள்ளி விபரங்கள் தமிழ் குடும்பங்களிடையே பாலியல் வல்லுறவு அதிகரித்துள்ளதாகவும் தந்தையே தனது சொந்த மகளை வல்லுறவுக்கு உட்படுத்துவதாகவும் மற்றும் தமிழ் யுவதிகளிடையே தேவையற்ற கர்ப்பங்கள் உருவாகி உள்ளதாக வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் தமிழ் பெண்கள் தங்கள் பெற்றோர் அவர்களின் சாதகத்துக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுக்கும் வரை பொறுமை காத்து வந்தார்கள், இப்போது காதல் தொடர்புகளை ஆரம்பிப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை.
இதில் உள்வாங்குவதற்கு கடினமாக உள்ளது என்னவென்றால் புதிய தலைமுறை இளைஞர்கள் முதலாவதாக தங்கள் முந்திய தலைமுறையினரின் பாரம்பரிய சிந்தனை வடிவங்களை பின்பற்றுவதற்கான சாத்தியமில்லை. அதேவேளை பிரிவுகள் இருப்பதன் சௌகரியத்தினால், தங்கள் சொந்த மக்கள்மீதே ஆதிக்கம் செலுத்திவந்த பழைய தலைமுறையினர் முந்தைய நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக முயன்று வருகிறார்கள். வெளிப்படையாகவே அதில் ஒரு பாரிய பொருத்தக்கேடு உள்ளது. இந்தப் பிரிவினைகளுக்கு பாலம் போடுவதால் ஒரு யுத்தவெற்றி அடையக்கூடியது எதுவுமில்லை. தமிழர்களிடையே உள்ள பிளவுகளை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். எங்களுடைய சங்கடங்கள் எல்லாம் இந்த தமிழர்களுடைய அபிலாஷைகளை எல்லாம் புறக்கணித்து விட்டு ஸ்ரீலங்கா அரசாங்கம், பெரும்பான்மையான ஏனைய தமிழர்கள் தங்கள் சொந்த மக்களாலேயே துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்பதை அறிந்து கொண்டும் ஒரு கைப்பிடி அளவான உயர்சாதி அல்லது வகுப்பினை சேர்ந்தவர்களுக்காக சமரசத் திட்டங்களை உருவாக்கிவிட முடியாது என்பதுதான். இந்த நவீன நாட்களில் விடயங்கள் எப்படி வேலை செய்யும் என்று சொல்லமுடியாது.
சில தமிழர்கள் வேண்டுவதற்கும் அநேக தமிழர்களுக்குத் தேவையானதுக்கும் இடையில் பாரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். யதார்த்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தீர்வினை வேண்டுவதன் மூலம் அவர்கள் 30 வருடங்களுக்கு மேலாக தமிழர்களாலாயே விலக்கி வைக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்ய முடியாது.
குறிக்கோளை அடைவதற்கான ஒரு உத்தியை எட்டாதவரை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
இங்கே எழுதப்பட்டுள்ள விடயங்களில் உண்மை இருந்தாலும், கட்டுரையாசிரியர் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளியிடுவதனை உணர முடிகின்றது. தமிழர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இருந்தாலும், இவ்வாறான கட்டுரைகள் வரவேற்கப் பட முடியாதவை.
ReplyDelete