இரத்தம் குடிக்கும் காட்டேறியிடம் சிக்கிய பாத்திமா அப்ரா..!
வீட்டு முற்றத்தில் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஒரு அழகான பூவொன்றைக் காட்டி தன்னருகில் அழைத்து இருபத்தைந்து வயதான இளைஞன் அவளது தலையில் மண்வெட்டியினால் பலமாகத் தாக்கி கொலை செத சம்பவமொன்று வெலிகம, கோட்டகொடை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
ரமழான் மாதம் 14ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெற்றுள்ள இப்பரிதாபகரமான கொடூர சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி வெலிகம, கோட்டகொடை முஸ்லிம் கிராமத்தில் 60ஃ5 இலக்கத்தில் வசித்த பாத்திமா அப்ரா (6 வயது) ஆவார்.
சம்பவம் பற்றி தெரிவிக்கப்படுவதாவது, குறிப்பிட்ட தினம் தனது பெற்றோர் வீட்டில் இல்லாதவேளை சிறுமி வீட்டுக்குப் பக்கத்திலுள்ள தனது மாமாவின் வீட்டு முற்றத்தில் பெரிய தாயாரின் மகள் பாத்திமா ருக்ஷானாவுடன் (வயது 5) விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரத்துரகே ரசாங்க (வயது 25) எனும் இளைஞன் பூவொன்றைக் காண்பித்து சிறுமியை தன் அருகில் அழைத்திருக்கிறான். பூக்களை அதிகமாக விரும்பும் சிறுமி அவ்விளைஞன் அருகே சென்றதும் சிறுமியின் தலையில் மண்வெட்டியினால் பல தடவைகள் தாக்கியிருக்கிறான்.
தாக்குதலுக்குள்ளான சிறுமி தாக்கப்பட்டு கீழே விழுந்ததும் விளையாடிக் கொண்டிருந்த சகோதரி ஓடிச் சென்று வீட்டில் தெரிவித்ததையடுத்து அயலவர்களும், சிறுமியின் மாமாவும் அவளை வெலிகம மாவட்ட வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமியின் உயிர் பிரிந்துள்ளது. இதனையடுத்து வெலிகம வைத்தியசாலையிலிருந்து சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
ஸ்தலத்துக்கு விரைந்த வெலிகம பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 50 மீற்றர்களுக்கு அப்பாலுள்ள சந்தேக நபரின் வீட்டுக்கு விஜயம் செத போதும் அவர் தலைமறைவாகியிருந்தார். குறிப்பிட்ட பிரதேசத்தில் பொலிஸார் தேடுதல் நடத்தி சந்தேக நபரைக் கைது செதனர்.
சந்தேக நபரும் அவரது தாயும் மாத்திரமே வீட்டில் வசித்து வந்ததாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. மாத்தறை மேலதிக மஜிஸ்திரேட் துலானி அமரசிங்க சம்பவம் நடைபெற்ற இடத்துக்கும், வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்கும் விஜயம் செது விசாரணைகளை நடத்தி பதிவுகளை மேற்கொண்டார். கொலை செயப்பட்ட சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியையும் சந்தித்து விபரங்களை பதிவு செதார்.
பொலிஸார் சந்தேக நபரின் வீட்டிலிருந்து 40 சிடிகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்த சிடிகள் வன்முறைகளைத் தூண்டும் வகையிலானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடராக ஆபாச படங்களைப் பார்த்து வருபவரென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் போதைப் பொருளுக்கு அடிமையான இவர் இரத்தம் குடிக்கும் காட்சிகளுடன் கூடிய ட்ரகுலா படங்கள் பார்ப்பதை அதிகம் விரும்புபவர் எனவும் கூறப்படுகிறது.
தலையில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்து கிடந்த சிறுமியின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தோடியிருக்கவில்லை எனவும், இரத்தம் குடிக்கும் பழக்கமுள்ள இவர் அவ்வாறே செதிருக்கலாமென்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, காடுகளுக்குச் சென்று மயில்களைக் கொன்று இரத்தம் குடித்து வந்தவர் என்றும் பிரதேச மக்கள் கருத்து வெளியிடுகின்றனர் என்றாலும் இது தொடர்பான புகார்கள் எதுவும் செயப்பட்டிருக்கவில்லை.
சந்தேக நபரின் தாயார் தனது மகனுக்கு நரபலி கொடுக்க வேண்டிய அவசியமொன்று உள்ளதாக முன்பு ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் செதிகள் வெளியாகியுள்ளன.
கொலையுண்ட சிறுமியின் தந்தை எம்.ஐ.எஸ்.எம். பைசல் (வயது 40) ஒரு முச்சக்கர வண்டி ஒட்டுபவராவார். தாயார் சுஹாதா (வயது 31). பாத்திமா அப்ரா கனிஷ்ட வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் பயின்று வந்தாள். 2006.05.23ஆம் திகதி அவளது பிறந்த தினமாகும்.
சிறுமியின் தந்தையினது மூத்த சகோதரர் எம்.ஐ.எச்.எம். சாபி கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட சந்தேக நபர் பிரதேச மக்களுக்கு பிரச்சினைக்குரியவராக குறிப்பிட்ட காலம் இருந்து வந்துள்ளார். அவரின் வன்முறை நடவடிக்கை காரணமாக கிராமத்தில் எவரும் அவருடன் உறவாடுவதில்லை என்று தெரிவித்தார்.
சந்தேக நபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 15 ஆம் திகதி நண்பகல் நடைபெற்றது. இறுதி சமயக் கிரியைகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெரும்பாலான பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து வெலிகம நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் பெருநாள் தினத்தைத் தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் இராணுவத்தினரும் மீளழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment