சமூகத்தின் பாதுகாவலர்கள் ஊடகவியலாளர்களே (படங்கள் இணைப்பு)
ஜே.எம்.ஹபீஸ்
ஊடகவியலாளர்கள் ஒரு சமூகத்தின் பாதுகாவலர்களாக தொழிற் படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் காமினீ செனெவிரத்ன தெரிவித்தார். இன்று 2012 08 25 ம் திகதி கண்டி பேராதெனிய ஓக்றே ஹோட்டலில் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக இலங்கை பத்திரிகை சபை நடாத்திய ஒரு நாள் செயலமர்வில் அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒரு நாட்டின் முத்துறை அதிகாரங்கலான சட்ட ஆக்கம், நிர்வாகம், நீதி ஆகிய துறைகளுக்கு அடுத்த படியாக ஊடகத்துறை நான்காவது சக்தியாக தொழிற்படுகிறது. ஒரு நாட்டின் அரசியல்வாதி , அரச நிர்வாக அதிகாரிகள், நீதி மன்றங்கள் போன்றவை மேற்கொள்ளும் பாரிய பணிகளுக்கு ஈடாக ஊடகத்துறையானது நாட்டையும் நாட்டு மக்களையும் வழி நடாத்துகிறது.
இப் பாரிய பொறுப்பை ஒரு ஊடகம் சரியாக நிறைவேற்றும் பொழுது அன் நாடு இயல்பாகவே குறைகளை அகற்றி நிறைவுடன் முன்னேறும். இதனாலே ஊடகத்துறை ஒரு சமூகத்தினதும், நாட்டினதும் பாதுகாவலர்கள் ஆவர் என்று கூறினார்.
இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டப்லிவ் தயாரத்ன தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் களனி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுனந்த மஹேந்திர, கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பீ. ரத்னாயக்க உற்பட பலர் இங்கு உரையாற்றினர்.
இலங்கை பத்திரிகை சபையின் பிரசுரங்கள் சிலவும் இங்கு உடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
Post a Comment