Header Ads



ஒஸாமா பின்லேடன் மரணம் தொடர்பில் மற்றுமொரு புதுத் தகவல்

'அமெரிக்க அதிரடி படையினர் நுழையும் முன்பே, அபோதாபாத் பங்களாவில், அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன், இறந்து கிடந்தார்' என, புத்தகம் ஒன்றில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
அல்-குவைதா தலைவருமான ஒசாமா பின்லாடன், கடந்த ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க கடற்படை பிரிவின் (சீல்) முன்னாள் அதிகாரி மார்க் பிஸ்சோனெட் என்பவர், மார்க் ஒவன் என்ற புனைப் பெயரில், ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
 
அடுத்த மாதம் வெளியாக உள்ள இந்த புத்தகத்தில் எழுதியுள்ள விவரங்கள், "மெயில் ஆன்லைன்' என்ற, இணைய தள பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், "அபோதாபாத் பங்களாவில், அமெரிக்க படையினர் நுழையும் முன்பே, ஒசாமா பின்லாடன் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் அதிரடி படையினர் சுட்டனர். எதிர் தாக்குதலுக்குக் கூட தயாராக இல்லாத நிலையிலேயே ஒசாமா பின்லாடன் இருந்தார். அந்த அறையில் கிடந்த துப்பாக்கிகளில் குண்டுகள் இல்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த புத்தகம், வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களைப் பார்க்கும் போது, "அபோதாபாத் பங்களாவில், ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இருந்த ஒசாமா பின்லாடனைச் சுட்டு வீழ்த்தியதாக' அமெரிக்கா கூறி வந்த குட்டு தற்போது உடைபட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுதிய அந்த எழுத்தாளருக்கு தற்போது மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, அமெரிக்க பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

1 comment:

  1. Just he wanted to sales his book for a higher volume and grate amount just he making a fake thrill

    ReplyDelete

Powered by Blogger.