சிரியாவுக்கு துணை நிற்போம் - ஈரான் அறிவிப்பு
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 17 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராடும் மக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது. இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அதிபர் ஆசாத் பதவி விலகி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என ஐ.நா. சபையும், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட மேலை நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
தற்போது மக்களுக்கு ஆதரவாக போரிடும் புரட்சி படையின் கை ஓங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் இவர்களின் பிடியில் உள்ளது. எனவே அதிபர் ஆசாத் திடீரென தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் டி.வி.யில் தோன்றினார். அவருடன் ஈரானின் சிறப்பு தூதர் சயீத் ஜலீலியும் இருந்தார். இவர் ஈரான் தலைவர் அயாதுல்லா அலி காமெனியின் சார்பில் சிரியா வந்து அதிபர் ஆசாத்தை சந்தித்தார். அப்போது அவர் சிரியா அதிபர் பஷர்அல்- ஆசாத்துக்கு ஈரான் ஆதரவு தருவதாக அறிவித்தார்.
சிரியாவில் நடப்பது உள் நாட்டு பிரச்சினை. அதில் மற்ற நாடுகள் தலையிடுவது சரியல்ல. தற்போதுஅரசை எதிர்த்து போரிடும் புரட்சி படைக்கு துருக்கி, சவுதிஅரேபியா நாடுகள் ஆயுதம் வழங்கி வருகின்றன. இவர்களுக்கு அமெரிக்கா பின்னணியில் இருந்து இயக்கி வருகிறது. அவர்களின் இந்த செயல்பாடுகள் நல்ல நடவடிக்கை அல்ல.
சிரியாவில் மக்கள் ரத்தம் சிந்துவதற்கு இவர் கள்தான் காரணம். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். சிரியா வந்த ஈரான் யாத்ரீகர்கள் 48 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இங்கு அவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
எந்த சூழ்நிலையிலும் சிரியா அதிபருக்கு தான் ஈரான் துணை நிற்கும். எங்களது நட்பு அவருடன் தொடரும் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து சிரியா அதிபர் ஆசாத் பேசினார். அப்போது, நாட்டில் தீவிரவாதத்தை வேரறுத்து 17 மாதமாக நடைபெறும் உள்நாட்டு பிரச்சினைக்கு முடிவு கட்டுவேன் என உறுதி அளித்தார். அதிபர் ஆசாத்துக்கு சிரியாவின் நட்பு நாடுகளான ரஷியாவும், சீனாவும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. அதிபர் ஆசாத் பதவி விலக சவுதிஅரேபியா ஐ.நா. வில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஏற்கனவே பொருளாதார தடை விதிக்க கொண்டு வந்த தீர்மானத்தை தங்களது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
அல்லாஹ்வின் தண்டனை அராஜகம் செய்யும் ஷீயாக்கள் மீது உண்டாகட்டும்.
ReplyDeleteஇந்த கொலைகாரர்களும் இவர்களின் ஆதரவாளர்களும் கடுமையாக தண்டிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை…..ஈரானிய ஜனாதிபதியை போற்றிப் புகழும் நம்மவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்: அதாவது இவர்களிடம்தான் எமது நாட்டின் ஆளும் வர்க்கத்தினரும் தாராளமாக உதவிகளைப் பெற்று விட்டு, எமது பள்ளிவாயில்களில் நிம்மதியாக தொழுகை நடாத்துவதற்கு விடாமல் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்……
ReplyDelete