Header Ads



மன்னர் அப்துல்லாஹ்வின் அறிவிப்புக்கு ஷியா அறிஞர்கள் வரவேற்பு

தூது

சவூதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டில் சவூதி ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ், பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்ட முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் மையம் ஒன்றை ரியாதில் நிறுவப் போவதாக அறிவித்தார். மன்னரின் இந்த பாராட்டத்தக்க அறிவிப்பை ஷியா அறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து ஷியா அறிஞர்கள் கூறியிருப்பது,

மார்க்கரீதியான, மத்ஹபுகள் ரீதியான பாரபட்சமான மற்றும் சகிப்புத் தன்மையற்ற சூழலுக்கு எதிராக மன்னர் மேற்கொண்ட வலுவான நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். அன்னியோன்யமான சமூகரீதியான உரிமைகளை பகிர்ந்தளித்து சமூக நல்லிணக்க சூழலை உருவாக்க ரியாதில் நிறுவப்போகும் கலந்துரையாடல் மையம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நிரபராதிகள் தாக்குதலில் பலியாவது கண்டிக்கத்தக்கது. சக மனிதர்களின் உயிரையும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை காப்பாற்ற நாம் முன்வரவேண்டும். சமூகத்தில் பிளவுகளையும், சீர்குலைவையும் ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் தடுக்கவேண்டும். அதற்காக யார் முயன்றாலும் அதனை அங்கீகரிக்க முடியாது.

நிரபராதிகளின் இரத்தம் சிந்தப்படுவதும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும், சமூகத்தில் பிரிவினைகளை ஏற்படுத்துவதும் ஒரு போதும் நியாயப்படுத்த இயலாது. இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஷேக் அப்துல்லாஹ் குனைஸி, அலி ஸய்யித் நாஸிர் ஸல்மான், ஷேக் ஹஸன் பின் மூஸா ஸஃபார், ஷேக் அப்துல் கரீம் காஸிம் அல் ஹபீல், ஷேக் அலி மதன் ஆலு முஹ்ஸின், ஷேக் யூசுஃப் மஹ்தி, ஷேக் ஜஃபர் ஆலு ரபஹ் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

2 comments:

  1. லிபியா, எகிப்து போல தனது நாட்டு இளைஞர்கள் மத்தியில் புரட்சி பற்றிய சிந்தனைகள் ஏற்பட்டு, தந்து குடும்ப அரசாட்சிக்கு முடிவு வந்துவிடக் கூடாது என்பதற்காக, இதுநாள் வரை 'சீர்திருத்தம், பெண்ணுரிமை' போன்ற பெயர்களில் மார்க்கத்திற்த்கு முரணாக, இதற்கு முன்னர் இருக்காத பல புதிய அனுமதிகளை வழங்கி இளைஞர்களை குசிப்படுத்தி வந்த மன்னர் அப்துல்லாஹ், இப்பொழுது ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த முயல்கின்றார்.

    ஒன்று, நாட்டின் கிழக்கில் தொடர்ந்துகொண்டிருக்கும் ஷீயாக்களின் ஆர்ப்பாட்டங்களை தணிப்பது, மற்றது, சிரியா, பஹரைன் போன்ற சர்வதேச விவகாரங்களில் சவுதியினது செயல்பாடுகளில் ஈரானை சற்று அடக்கி வாசிக்க வைப்பது ஆகியனவாகும். இதில் ஒரு அம்சம்தான் அஹ்மதி நஜாதியுடன் நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்.

    சவூதி மன்னரின் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக மட்டுமே நோக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  2. அது சரி, ஈரானை முஸ்லிம் நாடுகள் பட்டியலில் சேர்த்தது யார்?

    ReplyDelete

Powered by Blogger.