பொறுக்கி எடுப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் பொருட்கடையல்ல..!
அண்மையில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு சில மின்னஞ்சல்களில் நம் இஸ்லாமிய சகோதரர்களில் ஒரு சிலர் ஹிஜாப் என்னும் புர்கா மற்றும் தாடி என்பவையெல்லாம் காலாவதியானவை...... அக்காலத்திற்குத் தான் அவை.... தற்போது நவீன காலத்திற்கு பொருந்தாது இஸ்லாமியர்கள் மாற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.
அப்போது அமீனா கிரின் என்னும் வெள்ளைக்காரப் பெண்மணி இஸ்லாத்தை தழுவியவர் வெகுண்டு எழுந்து நீங்களெல்லாம் என்ன பிறப்பால் இஸ்லாமியர்கள். அல்லாஹ்வின் சட்டம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று எழுதியிருந்தார்.
அப்போது அமீனா கிரின் என்னும் வெள்ளைக்காரப் பெண்மணி இஸ்லாத்தை தழுவியவர் வெகுண்டு எழுந்து நீங்களெல்லாம் என்ன பிறப்பால் இஸ்லாமியர்கள். அல்லாஹ்வின் சட்டம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று எழுதியிருந்தார்.
இஸ்லாத்தை தழுவியப் பெண்ணிற்கு இஸ்லாத்தின் மீதுள்ள ஈர்ப்பு என்னை ஈர்த்தது.
அந்த அம்மையார் அழகாகச் சொன்னார்கள் ........இஸ்லாத்தில் இது தேவை இது தேவையில்லை இதைப் பின்பற்றுவேன் இதைப் பின்பற்ற மாட்டேன் என்று நம் இஷ்டப்படி தேர்ந்தெடுத்து பின்பற்ற இஸ்லாம் ஒன்றும் பொருட்கடையல்ல (சூப்பர் மார்கட் அல்ல... அங்கே தான் இஷ்டப்பட்ட பொருளைத் தேர்ந்து எடுக்கலாம் விரும்பாததைத தள்ளலாம்.
அந்த அம்மையார் இன்னொரு விசயத்தையும் சொன்னார்கள் (ஆண்கள் விரும்புவார்கள்) ..........பெரும்பாலான தீவிரமான மார்க்கபற்றுள்ள பெண்கள் கூட பர்தாவைப் பின்பற்றும் பெண்கள் கூட தன் கணவர் இன்னொரு கல்யாணம் செய்வதை ஏற்பதில்லை தகுதியுள்ள ஆண்கள் நான்கு திருமணம் செய்யலாம் என்பதை ஏற்காத இது கூட இறைவனின் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத நிராகரிப்பு செயலே என்றார். இதை ஏற்பேன் இதை ஏற்கமாட்டேன் என்று கூற இஸ்லாம் ஒன்றும் பொருட்கடையல்ல என்றார்.
அல்லாஹ்வின் ஒவ்வொரு சட்டத்தின் மீதும் அந்த அம்மையாருக்கு உள்ள ஆழ்ந்த பிடிப்பு பிரமிக்கவைத்தது
இந்த மார்கத்தை நீங்கள் புறக்கணித்தால் இறைவன் வேறொரு சமூகத்தாருக்கு இஸ்லாத்தை ஏற்றி வைப்பான் அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள் என்ற குர் ஆனின் வரிகளை உண்மைப் படுத்துவது போல் இருந் த து அமீனா கிரீன் அவர்கள் இஸ்லாமியப் பற்று
பொறுக்கி எடுப்பதற்கு இஸ்லாம் ஒன்றும் பொருட்கடையல்ல!
masha allah antha pen mannikku allah islathai america il valarkkak kudiya sakthiyai etpaduthi vaipanaha..
ReplyDeletemasha allah intha penmanikku america il islathai valarkkak kudia sakthiyai kodupppanaha...
ReplyDeleteமாஷா அல்லாஹ்.
ReplyDeleteகட்டுரை சிறிதாக இருந்தாலும், செறிவாக இருக்கின்றது.
நிறையப் பேர் செய்யும் தவறை அழகாக சுட்டிக் காட்டியுள்ளது.
part time முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
including us,,,,,,, masha allah,,,
ReplyDelete