Header Ads



முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும்

 
அஸ்லம் எஸ்.மௌலானா
 
மியன்மாரில் பௌத்த தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஏற்படுவதற்கு முன்னர் நமது முஸ்லிம் சமூகம் நிறுவன ரீதியாக ஒற்றுமைப்பட்டு பலப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் ஏ.எம்.ஜெமீல் வலியுறுத்தியுள்ளார்.
 
நேற்று சாய்ந்தமருது - மாளிகைக்காடு எல்லை வீதியில் நடைபெற்ற முஸ்லீம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வேட்பாளர் ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது,
 
“இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது வெறுமனே உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்ற தேர்தலல்ல. இது எங்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டும் ஒரு முக்கிய தேர்தலாகும். முஸ்லீம்கள் இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய அளவில் இம்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நமது நாட்டில் எங்களது மதச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. பூட்டுகள் போடப்படுகின்றன. சுதந்திரமாக எங்களது சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை முழு உலகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. ஒருபுறத்தில் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குங்கள் என சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகித்து வரும் இவ்வேளையில் தமிழர்களுக்கு ஏதாவது வழங்கியே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் அரசு தள்ளப்பட்டுள்ளது.
 
எதிர்காலத்தில் ஏதாவது தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்கும் போது முஸ்லீம்களுக்கான பங்கை பெறுவது என்பது முஸ்லீம் தலைமைத்துவங்கள் மீது சாட்டப்பட்டுள்ள மிகப் பிரதானமான கடமையாகும். இதற்க்கு பொருத்தமான முஸ்லீம் நிறுவனம் என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான். எனவே நாங்கள் முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்த வேண்டியது எங்களது தலையாய கடமையாகும். சாய்ந்தமருது மக்கள் 95வீதமான வாக்குகளை முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கி வருகின்றனர். அதனை இப்போது 100வீதமாக மாற்ற வேண்டும்.
 
தமிழ் தீவிர வாதிகளின் பிடியில் இருந்து நமது சமூகத்தை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸ் தற்போது சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
 
அரசாங்கத்துடன் ஓட்டிக் கொண்டு அரசுக்கு ஒத்து ஊதுபவர்களால் நிட்சயமாக நமது சமூகம் தொடர்பாக வாய் திறக்க முடியாது. தற்போது நாடு பூராவும் நமது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது வாய் மூடி மௌனிகளாக இருந்து கொண்டு பள்ளிவாசல்களுக்கு எதுவுமே நடைபெறவில்லை என்று அவர்கள் கூறுவதில் இருந்து இதனை நாங்கள் அறிந்து கொள்ளலாம்.
 
மறைந்த தலைவர் இந்த முஸ்லீம் இயக்கத்தை இந்த பிரதேச நலனுக்காக மட்டும் ஆரம்பிக்கவில்லை. நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம்களுக்காகவும் ஏன் சர்வதேசத்திலும் உள்ள முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய முறையில் இந்த முஸ்லீம் காங்கிரசை அவர் உருவாக்கினார். அன்றிருந்த தலைவரை விட தற்போதுள்ள தலைவர் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகிறார். இந்த சவால்களை முறியடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும்.
 
மறைந்த தலைவர் 2012ம் ஆண்டு அரசியல் ரீதியில் பாரிய எழுச்சி ஏற்படும் என எதிர்வு கூறி இருந்தார். அந்த எழுச்சி இந்த சாய்ந்தமருதில் இருந்து ஆரம்பித்துள்ளது. மக்கள் தற்போது அணியணியாக முஸ்லீம் காங்கிரஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வருகின்றனர்.
 
கிழக்கு மாகாண சபையில் உள்ள 37 ஆசனங்களில் 19 ஆசனத்துக்கு மேல் ஆசனங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். தற்போதைய சூழலில் இந்த அரசு 12ஆசனங்களுக்கு மேல் பெற முடியாது. ஆகையால் யார் ஆட்சி அமைப்பது என்றாலும் முஸ்லீம் காங்கிரசின் தயவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.
 
கடந்த மாகாண சபை காலத்தில் தங்களால் பாரிய அபிவிருத்திகளை செய்ய முடியாவிட்டாலும் நமது சமூகத்துக்கு எதிராக இரவோடுடிரவாக கொண்டு வரப்பட்ட பல சட்ட மூலம்களை தடுத்துள்ளோம். இதன் காரணமாக நமது சமூகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு நான் என்னை முழுமையாக அர்ப்பணிப்பேன் என்று உறுதிபகர்கின்றேன்” என்றும் குறிப்பிட்டார்.
 

3 comments:

  1. இப்பொலுது எல்லம் சொல்லுவாங்கல். தெர்தல் முடிஞால் இவங்கல் சொன்ன பெச்சு இவஙகலுக்கெ ஜாபகம் இருக்காது.

    ReplyDelete
  2. தம்பி, நல்ல சோக்கா கதைக்கிறியல், உதக் கேட்டு சனம் உங்கட கட்சிக்கு வோட்டு போடுவினம் எண்டு நினைக்குரீரோ?
    இலக்சன் முடிஞ்சு உங்களையெல்லாம் எங்க தம்பி கானேலும்?

    ReplyDelete
  3. முஸ்லிம்களே சிந்தியுங்கள் பின்னணியில் இருந்து செயற்படும் எதிரியை இனம் கானுங்கள் குர்ஆன் ஹதீஸுக்குள் இருந்தவாறு எவ்வாறு எதிரியை பிணன்னடையச்செய்யலாம் என்று முஸ்லிம்களே சிந்தியுங்கள்.தேர்தல் வரும் போதும்,தேர்தலில் தோல்வியடையும் போதும்,உரிமைகள் பரிக்கப்பட்டு அனாதையாகும் போதும் வெற்றுப்பேச்சு பேசும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே சற்று வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும். மக்களாகிய நாங்களே சிந்தித்து செயற்பட தொடங்கிடுவோம்.

    ReplyDelete

Powered by Blogger.