கோஹிலாவத்த பள்ளிவாசலில் காடையர் அராஜகம் - பாங்கு சொன்ன முஅத்தீன் மீது தாக்குதல்
மொஹமட் ஹசன் + பஸ்லி யூசுப்
கொழும்பு - கோஹிலாவத்த பள்ளிவாசல் மீது தாக்குதல் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மொஹமட் ஹசன் என்ற எழுத்தாளர் எமது இணையத்திடம் தெரிவித்தார்.
30.09.2012 அன்று வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாகனங்களில் வந்த சிலரே இவ்வாறு பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பள்ளிவாசலுக்கு சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உதவிச் செயலாளர் மௌலவி தாஸிமை தொடர்புகொண்டு கேட்டபோது அவா இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
அத்துடன் சம்பவத்தில் தொழுகைக்கான அதான் ஒலித்த பொது பள்ளி வாயளுக்குள் நுழைந்த இனம் தெரியாத நபர்கள் முஅத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதன்போது அவர் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். ஒலி வாங்கியும் தேசப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக அவர்களுடைய வீடுகளுக்கு பொலிஸார் சென்றதாகவும், அச்சமயம் சந்தேக நபர்கள் வீட்டில் நிற்காத நிலையில் அவர்களுடைய பெற்றோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது பள்ளிவாசலில் வழமைபோன்று இபாதத் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தாசிம் மௌலவி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
where is a MP Azwer theaf , cheater he say this goverment dosnt make any Interference for masjid
ReplyDelete