Header Ads



மூளையை உற்சாகப்படுத்த புத்தகம் படியுங்கள் - ஆய்வில் தகவல்

 
புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல - அது மூளையை உற்சாகப்படுத்தும் டானிக் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூளையியல் விஞ்ஞானி சூசன் கிரின்பீல்ட் என்பவர் செய்த ஆய்வில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் படிப்பது குழந்தைகளின் கவனத்திறனை அதிகரிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. கதைப்புத்தகங்களில் ஒரு ஆரம்பம், இடைநிலை, முடிவு என இருப்பது நமது மூளையினை சிந்திக்கவும், விளைவு எப்படி இருக்கும் என தூண்டவும் செய்கிறது.
 
குழந்தைகளாக இருக்கும்போது படிக்க ஆரம்பிப்பது மூளையின் திறனை வளர்க்க உதவுவதால், பெற்றோர்கள் குழந்தைகள் கேட்கும் பருவத்தை அடைந்தவுடன் படித்துக் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் சூசன். படிப்பதன் மூலமாக நாம் படிக்கும் விசயத்தை மூளை நேரடியாக  உணர்கிறது , இதனால் மூளையின் நரம்புகள் தூண்டப்படுகிறது. ஆனால் இவ்வாறான உணர்வு தொலைக்காட்சி பார்க்கும்போதோ அல்லது கணிணி விளையாட்டில் ஈடுபடும்போதோ ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே நல்ல நூற்களை நாமும் படிப்போம் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுவோம். inneram

No comments

Powered by Blogger.