ஆண்கள் பாத்திரம் கழுவாது, துணிகளை கழுவாது இருப்பதும் விவாகரத்துக்ககு காரணம்..!
மனைவிக்கு உதவியாக, பாத்திரம் கழுவாததாலும், அழுக்கு துணிகளை துவைத்து தராததாலும், 30 சதவீத விவாகரத்து ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
லண்டனை சேர்ந்த, "டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,
தற்போதுள்ள அவசரமாக சூழ்நிலையில், வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பும் பெண், மீண்டும் வீட்டு வேலைகளை தொடர சிரமப்படுகிறார். அந்த நேரத்தில் கணவனின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார். இது நிறைவேறாத பட்சத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில் முடிகிறது.பாத்திரங்களை கழுவாமல் வைத்திருப்பது, அழுக்கு துணிகளை அதற்குரிய கூடையில் போடாமல், கண்ட இடத்தில் போடுவது, போன்ற பிரச்னைகளால், ஒரு மாதத்தில் கணவன், மனைவி இடையே, குறைந்த பட்சம் மூன்று முறை சண்டை ஏற்படுகிறது. இந்த சண்டை மாத கணக்கில் நீளும் போது, மணமுறிவு ஏற்படுகிறது. இந்த சிறிய பிரச்னைக்காக, 30 சதவீதம் பேர் விவாகரத்து செய்கின்றனர்.
பண பிரச்னையால் ஏற்படும் விவாகரத்துக்களின் எண்ணிக்கை குறைவு தான். நகர்புறங்களில் தான், 56 சதவீத விவாகரத்துகள் இந்த விஷயத்துக்காக நிகழ்கின்றன.இவ்வாறு இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது
what about the divorce rate due to TV serials?
ReplyDelete