ராஜகிரிய பள்ளிவாசல் விவகாரத்திற்கு தீர்வு எப்போது,,??
எம்.ஆர்.ஏ. பரீல்
ராஜகிரிய ஒபேயசேக்கரபுர தாருல் ஈமான் பள்ளிவாசலில் தொழுகை நடாத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நோன்புப் பெருநாளுடன் முற்றுப்பெற்றதையடுத்து அப்பள்ளிவாசலில் தற்போது தொழுகை நடைபெறுவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாளுடன் தொழுகை நடைபெறுவதில்லையென என குறிப்பிட்ட குறித்த பகுதியைச் சேர்ந்த மஸ்யாத் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் நவவியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் பள்ளிவாசல் நிர்வாக சபையைச் சேர்ந்த ஒருவர் பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.
குறித்த பள்ளிவாசலுக்கு நோன்பு காலத்தில் (ஜுலை, 29 ஆம் திகதி) பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற குழுவினர் பள்ளிவாசலுக்கு முன் கதிiரைபோட்டு எதிர்புத் தெரிவித்து, தராவிஹ் தொழுகைக்கு தடை விதித்தனர்.
இவ்விவகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபய ராஜபக்ஸவரை சென்றது. பின்னர் வெலிக்கட பொலிஸார் இரு தரப்பையும் அழைத்து பேச்சுக்களில் ஈடுபட்டு நோன்பு காலத்தில் மாத்திரம் தொழுகையை நடாத்த அனுமதியளித்தனர்.
நோன்பு கழிந்து பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து சட்டபூர்வ அனுமதியை பெற்றுக்கொண்டபின் தொழுஐக நடாத்தும்படியும் உத்தரவிட்டனர். இக்காலக்கெடு முற்றுப்பெற்றுள்ள நிலையில் தற்போது தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பள்ளிவாசல் ஜாமிஉத்தாருல் ஈமான் என்ற பெயரில் வக்பு சபையிலும் கோட்டே மாநகர சபையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment