முஸ்லிம் காங்கிரஸ் குப்பை தொட்டியில் - ரவூப் ஹக்கீமை ஒருபோதும் நம்புவது இல்லை
TM
எம்.பரீத்
நியமனங்களை வழங்கும்போதும் அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும்போதும் எங்கள் சகோதரரின் நஜீப் அப்துல் மஜீதின் கடிதத்தைப் பார்ப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்களை நாங்கள் கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை கூப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்குகளை அளியுங்கள் என சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
கிண்ணியா புஹாரியடிச் சந்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை நேற்று புதன்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ரணில் வென்றாலும் மரம் வென்றாலும் சரி எங்கள் ஜனாதிபதியை மாற்றமுடியாது. நாடாளுமன்றத்தையும் மாற்றமுடியாது. இது எங்கள் சுதந்திரக் கட்சியின் பக்கம் இருக்கின்றது. இங்குள்ள நகரசபை, பிரதேசசபை சுதந்திரக் கட்சியின் பக்கம் இருக்கின்றது. இன்று சுதந்திரக் கட்சிதான் பலமிக்க கட்சி ஆகும்.
பாடசாலையோ, வீதி அபிவிருத்தியோ, மின்சார வசதியோ மற்றும் ஏனைய அபிவிருத்திகளையோ செய்து கொடுக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியினாலோ அல்லது மரத்தினால் வெல்லுகின்ற எம்.பி.க்களினாலோ ஒன்றும் சாதிக்கமுடியாது. ரவூப் ஹக்கீமுக்கு எல்லா அதிகாரமும் இல்லை. எங்கள் சுதந்திரக் கட்சியிடமே உள்ளது.
அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று விளங்கிக்கொண்டால் அதுபோன்று ஏனையோர்களினால் எதையும் சாதிக்கமுடியாது என்றும் விளங்கிக்கொண்டால் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து வெற்றியின் பங்காளியாக வேண்டும்.
இன்று கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களும் இன்று அவர்களை விட்டு ஓடிவந்து எங்கள் சுதந்திரக் கட்சியில் இணைகின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இரண்டு பக்கங்களிலும் நடனம் ஆடுகின்றனர். காலையில் கூறியதை மாலையில் கூறமாட்டார்கள். அப்படிச் சொல்லும் ரவூப் ஹக்கீமை ஒருபோதும் நம்புவது இல்லை.
கடந்த மாதம் இந்தப் பகுதியில் 340 பேருக்கு அரசாங்கத்தினால் நாம் நியமனங்களை வழங்கினோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஒருவருக்குக் கூட நியமனங்கள் வழங்க முடியாது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நியமனங்களை வழங்கும்போதும். அபிவிருத்தித் திட்டங்களைச் செய்யும்போதும் எங்கள் சகோதரரின் நஜீப் அப்துல் மஜீதின் கடிதத்தைப் பார்ப்போம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அனுப்புகின்ற கடிதங்கள் நாங்கள் அதை கசக்கி குப்பைத் தொட்டியிலே போடுவோம். ஆகவே கடிதங்களை கூப்பைத் தொட்டியிலே போட வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குப் வாக்குகளை அளியுங்கள்.
உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் பள்ளிவாசல்களை கட்ட பணம் வேண்டும் என்றால், உங்கள் குழந்தைகளுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்றால் அவ்வாறாயின் நீங்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்குகளை அளியுங்கள். ஏனெனில் அதற்குத்தான் பலம் இருக்கின்றது.
எதிர்வரும் 9ஆம் திகதி தேர்தல் வெற்றியைக் கண்டு யானை காட்டுக்குப் போய்விடும். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் சேவையைக் கண்டு யானை சிறியதாக போய்விட்டது. அன்று 40 இலட்சமாக இருந்த யானை இன்று 20 இலட்சமாக குறைந்து விட்டது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு இன்று அவர் கடைசியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்று கூடத் தெரியாது இருக்கின்றார். அவர் இங்கு வந்திருக்கின்றாரா? உங்கள் வீடுகளுக்கு வந்திருக்கின்றாரா? அவர் நாட்டிலேதான் இருக்கின்றாரா? ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலர் விலகிச் சென்றுள்ளனர். இனி இந்தக் கட்சியால் அந்த ஒரு பலத்தை இனி ஒருபோதும் பெற்றுக்கொள்ளமுடியாது' என்றார்.
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான நஜீப் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த கிளைத் திறப்பு விழாவில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தைப் அமைச்சரிடம் பெற்றுக்கொண்டனர்.
பள்ளிவாசல் கட்ட உங்களின் பணம் வேண்டவே வேண்டாம். பள்ளிவாசல் கட்டுவது உயர்ந்த சதகதுள் ஜாரியா. அந்த பெரும் பேறுகளை, அல்லாஹ்வை ஈமான் கொள்ளாத ஒருவன் அடைந்து கொள்ள முடியாது.
ReplyDeleteஐயா, முஸ்லிம் காங்கிரசின் கடிதங்களை குப்பைத் தொட்டியில் போட்டாலும் இல்லாவிட்டாலும், இருக்கின்ற பள்ளிவாசல்கள் தாக்கப் படமால் பார்த்துக்கொள்ளுங்கள், தாக்க வருகின்றவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள். அதுவே போதும், உங்கள் பணமெல்லாம் பள்ளிவாசல்களுக்கு தேவையில்லை.
பிச்சை வேண்டாம், நாயைப் பிடி.
ம்ம்ம்ம்ம்ம் இப்போது புரிகின்றது முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்திருந்தும் ஏன் தொழில்வாய்ப்புகளை வழங்கவில்லை என்று... நன்றி சரத் அமுனுகம(இவரும் கொப்புப்பாய்ந்த குரங்குதான்)
ReplyDeleteநீங்கள் ஒரு சிரேஸ்ட்ட அமைச்சர் உங்களது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பிறிதொரு அமைச்சர் சார்ந்த கட்சி தொடர்பில் இப்படி எல்லாம் கருத்து கூறக்கூடாது
ReplyDeleteஅப்படியானால் நீங்கள் உங்களது கட்சிக்காரகளின் தேவைகளை மட்டும் தான் நிறைவு செய்வீர்களா அமைச்சரே அது ஜனநாயகம் இல்லையே நாட்டில் உள்ள முக்கிய தேவைக்கும் திறமைக்கும் சேவை செய்யுங்கள் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களுக்கு மட்டும் தான் உங்களது உதவி என்றான் நீங்கள் ஒரு மூன்றாம் நம்பர் ஆள்.
உங்களுக்கு பொறுப்பற்ற அமைச்சு தானே தந்துள்ளார்கள் உங்களிடம் SLMC காரர்களுக்கு தேவை இருந்து இருக்காதே நீங்கள் எல்லாம் அமைச்சர்கள் தூ........