இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு உலகின் சிறந்த நிர்மாணத்துறை விருது (படம்)
அஸ்ரப் ஏ சமத்
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பொறியியல் கூட்டுத்தபாணம் கடந்த வாரம் பரிஸில் நடைபெற்ற சர்வதேச நிர்மாணக் கட்டிட கம்பணிகளின் விருது வழங்களின்போது இலங்கை பொறியியல் கூட்டுத்தபாணத்திற்கு விருது கிடைக்கப்பெற்றது.
இவ் விருதினை அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையில் பொறியியல் கூட்டுத்தபாணத்தின் நிருவாகத்தினர் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் அலரிமாளிகையில் சந்தித்து இவ் விருது பெற்றதனையும் இக் கூட்டுத்தாபணம் தற்பொழுது இலபகரத்தில் வெற்றிகரமாக இயங்குவதையும் விளக்கிக் கூறினர்.
இவ் விருதினைப்; பெற்றுக்கொள்வதற்காக கூட்டுத்தாபணத்தின் தலைவர் ஜகத்குமார பெரேரா தலைமையிலான குழுவினர் அண்மையில் பரிஸ் நகருக்கு சென்று விருதைப் பெற்றுக்கொண்டனர் இந் நிகழ்வின்போது 77 நாடுகளின் நிர்மாணத்துறை கம்பணிகள் பங்குபற்றியுள்ளது.
Post a Comment