Header Ads



இலங்கை சுண்டைக்காய் நாடு - விஜயகாந்த் வர்ணிப்பு


வெப்துணியா

சுண்டைக்காய் நாடான இலங்கை, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது எ‌ன்று‌ம் இதைவிட இந்திய அரசு‌க்கு ஏற்பட்டு‌ள்ள வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை எ‌ன்று‌ம் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை‌யி‌ல், கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரைத் துடைக்கவோ திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழி காணப்படவில்லை. இராமே‌ஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக் கதையாக உள்ளது. மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்றுவரை பலனில்லை.

தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அவரவர் இயல்புக்கும், அவரவர் சக்திக்கும் ஏற்றவாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் காதில் விழுந்ததாகவோ, அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவோ மத்திய அரசு முன்வரவில்லை. சுண்டைக்காய் நாடான இலங்கை இப்போது கூட, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை.

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். மீனவர் நிலைமையை பிரதமரிடம் விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

11 comments:

  1. இவர் முழுநேரமும் போதையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள்தான் சொல்கின்றன. சரியாகத்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. adey unda padangala parthadukku engalukku seruppala adikanum

    ReplyDelete
  3. இரத்தினத்தின் முன்னால் சக்கை கல்லுக்கு என்ன பெருமதி? சுண்டைகாய் நாடு 130 கோடி பேறு வாழும் நாட்டின் மிரட்டலுக்கே அடிபணியவில்லையென்பது அந்த நாட்டின் ஆத்ம பலத்தை எடுத்துகாட்டுகிறது

    ReplyDelete
  4. இப்ராஹிம் ராவுத்தரின் திரைப்படத்தில் நடிப்பதாக நினைத்து பேசிட்டார் விடுங்கப்பா....பாகிஸ்தான் தீவிரவாதிகளை அளித்துட்டார் இப்போ சிறிலங்காவை அளிக்கப்போறார்...தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் மடையர்கள் இருக்கின்றார்களே...

    ReplyDelete
  5. ade muttal vijayakanth nee oru mulunera kudikaran. padangalil 18 vayathu kuttiyai kattipidiththu paattu padippai, thaniyaga pakisthan senru pakisthanai alippai. unnala mudinthal thamil naattu arasiyal muttalgal elloraium koottikondu kachcha theevu vaa paarkkalam. ade kudigara,,, unakkum vaiko, seeeeeeman. mani, ramadas sathyaraj ponrorukku sri lanka thamilan illaavittal arasiyal seiyamudiyamal seththu viduveergal., thamil naattu thamilanai sinima mokaththil vaththu aatsi seium arasiyal muttalagal neengal

    ReplyDelete
  6. To vettikanth, Pooda... ivane... nallaa vaayila varudhu...
    onaya thittura mood enakkilla... irundhaalum onne' onnu, pooda... sema panni.


    ARAB SPIDER.

    ReplyDelete
  7. thengai madayen wallarasu nadugalukke thalai wanangadha ilangai iwangalukka wanag wendum....indh sundakkai payalgalai yau kanakkeduppadhu..........kudikara payalin pechchu widinjal pochchu.........

    ReplyDelete
  8. விஜயகாந்த் படத்தில் நடிப்பதை போன்று
    நிதர்சனத்தில் நடிக்க முய்ல்கின்றார்

    ReplyDelete
  9. ஒரு பக்கம் முழு நேர போதை. இன்னொரு பக்கம் ஜெயலலிதாவிடம் சிக்கி தவிக்கும் அவலம். இதற்கிடையில் இப்போதுதான் பாவம் கேப்டனுக்கு பேசுவதற்கு ஒரு தலைப்பு கிடைத்திருக்கிறது. சினிமா வசன நடையில் பின்னி எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் ஓராயிரம் ஓட்டைகள். அதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்த நாட்டின் முதுகிலுள்ள ஒரு ஓட்டயைப்பற்றி முழுநேர விவாதம் நடத்தி அரசியல் பிழைப்பு நடத்துவதுதான் இந்தியத் தமிழர்களின் ஸ்பெசாலிட்டி. இதில் இந்தியா வல்லரசாக வேண்டுமென்று பகல் கனவு வேறு!

    ReplyDelete
  10. INTHIYA KKOTTHAADI KALUKKU KOOTTHAADDATTHIRKKU MATHIPPALIKKUM MADAYARKALUKKU ITHU SEMA ADI.EMAKKALLA.

    ReplyDelete

Powered by Blogger.