சம்மாந்துறையில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டம் (படங்கள் இணைப்பு)
ஹப்றத்
மஹிந்த சிந்தனையின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கையாக நாடு பூராகவுமுள்ள 5000 ஆரம்ப மற்றும் 1000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 11 பாடசாலைகளில் முன்னிலை நடவடிக்கையாக பாடசாலைகளான தாறுல் உலும் வித்தியாலயம் மற்றும் முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்று 03.08.2012 ல் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபரகளான எம்.ஏ.றஹீம், ரீ.எம் தௌபீக், ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மற்றம் வலயக்கல்விப் பணிப்பாளர்; எம்.கே.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்;. விஷட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் மற்றும் அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் வை.பி.ஏ. முகம்மட் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் யு. அமீரலி, பொருலாளர் - ஏ.எம். தாஹா நழீம், கிராம சேவை உத்தியோகத்தர்கள மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment