Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை - பசில் ராஜபக்ஸ கூறுகிறார்

 
கிழக்கு மாகாணத்தில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை.

அரசியல் தீர்வு அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் என்பனவற்றை விரும்பும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும். அதற்காக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. காரணம் இது தேர்தல் காலம்.

அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆளும் கட்சி நாடாது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அதற்கு மக்களின் ஆணை கிடைக்காது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு மக்களின் ஆதரவுடன் எம்மால் ஆட்சியமைக்க முடியும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. இன்னும் ஒரு கேஸ் வந்து முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன்தான் இருக்கிறது என்று சொல்லும்...

    ReplyDelete
  2. அமைச்சர் கிழக்கின் கள நிலவரம் புரியாமல் பிதற்றி உள்ளார்.
    கிழக்கு மாகாண சபைக்கு கடந்த முறை TNA போட்டியிட வில்லை. அதன்காரணத்தால் அப்போதைய சபையை அரசு கைப்பற்ற முடிந்தது அத்துடன் நாட்டை மீட்ட கோஷம் மக்கள் மத்தியில் ஓரளவு எடுபடடது ஆனால் இம்முறைய தேர்தல் சற்று வித்தியாசமானது.
    கிழக்கில் TNA போட்டியிடுவதால் தமிழ் மக்கள் தங்களது உச்ச வாக்களிப்பை TNA க்கு வழங்குவர்.அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றுவர் முஸ்லீம்களின் வாக்குகளில் பிரிப்பு ஏற்படும் பட்சத்தில் திருகோணமலை மாவட்டத்தையும் கைப்பற்றுவர் இதன் ஊடாக இவ்விரு மாவட்டங்களிலும் குறைந்தது 9-12 ஆசனங்களை பெறுவார் அம்பாறை மாவட்டத்தில் குறைந்தது 2 ஆசனங்களைப் பெறுவார் கிட்டத்தட்ட 14 ஆசனங்கள் அவர்களது கைகளுக்கு செல்லும்
    தொடரும் ......

    ReplyDelete
  3. முஸ்லீம் காங்கிரசை எடுத்துக்கொண்டால் அம்பாறை மாவட்டத்தில் குறைந்தது 4 ஆசனங்கள் கூடியது 6 ஆசனங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 2 கூடியது 3 திருகோணமலை மாவட்டத்தில் குறைந்தது 2 கூடியது 3 ஆசனங்களைப்பெருவர் மொத்தத்தில்

    மூன்று மாவட்டங்களிலுமாக அரசு 12 ஆசனங்களுக்கும் குறைவான ஆசனன்களையே பெறுவார் ஏதாவது ஒரு கட்சியை கூட்டாக சேர்க்காத பட்சத்தில் யாரிடனும் கூட்டுச்சேர்ந்தே ஆக வேண்டும் TNA அரசுடன் சேர வாய்ப்பேயில்லை UNP பெறும் ஆசனங்கள் கோரம் போதாமல் இருக்கும் அத்துடன் அவர்களும் அரசை ஆதரிக்க வாய்ப்பேயில்லை அரசுக்கு சுலபமான தெரிவு SLMCதான்.

    வார்த்தைகளை கொட்டிவிட்டால் பேந்து கவலைப்பட வேண்டி வரும் அரச உயர்மட்டங்கள் வீறாப்பான வார்த்தைகளை பேசாமல் இருப்பது உகந்தது

    ReplyDelete

Powered by Blogger.