லிபியாவில் சூபிகளின் சியாரங்களை தரைமட்டமாக்கும் சலபிகள்
TN
லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள சூபி முஸ்லிம்களின் புனிதத்தலம் சேதமாக்கப்பட்டுள்ளது. கடும்போக்கு சலபி முஸ்லிம்களின் தாக்குதலிலேயே இந்த தலத்தின் பாதி அளவான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
லிபியாவின் ஸ்லிதான் நகரில் உள்ள சூபி அறிஞர் ஒருவரின் சமாதி (சியாரம்) ஒன்று சேதமாக்கப்பட்டு அடுத்த தினமே திரிபோலியில் இருக்கும் சூபி புனிதத்தலம் சேதமாக்கப்பட்டுள்ளது. புல்டோசருடன் வந்தவர்கள் இந்த தலத்தை சேதமாக்கியதாக திரிபோலி குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த புனிதத் தலம் பல கடவுள் வழிபாடு செய்யப்படும் இடம் என சலபி முஸ்லிம் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
திரிபோலியில் இருக்கும் சூபி புனித தலமான அல் ஷாப் அல் டமானி பள்ளிவாசலே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவன் ஒருவன் பி. பி. சிக்கு கூறும்போது, அதிகம் பேர் கொண்ட சலபிக்கள் புல்டோசர் ஒன்றுடன் வந்து பள்ளிவாசலை தகர்த்ததாகவும் அவர்களுடன் இராணுவ பொலிஸாரும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பரில் திருப்போலியில் இருக்கும் சூபி ஆறிஞரின் சமாதி (சியாரம்) ஒன்று சலபி முஸ்லிம்களால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்வைதக் கொள்கையை பரப்பும் சூபிகளிடம் இருப்பது இஸ்லாமிய கோட்பாடு அல்லவே.
ReplyDeleteஇந்து மதத்தின் அத்வைதமும், கிரேக்க தத்துவங்களின் கலவையும்தான் இந்த சூபித்துவம் என்ற வழிகேடு ஆகும்.
கட்டப் பட்ட கபுருகள் உடைக்கப் பட வேண்டும் என்பதனாலும், சமாதிகளில் வழிபாடு செய்ய முடியாது என்பதனாலும், லிபியாவில் சலபிகள் செய்யும் நல்ல செயலை வரவேற்போம்.
@ikram,
ReplyDeleteதூய இஸ்லாம் என்னவென்று தெரியாமல், சூபித்துவ வழிகேடர்களின் கையிற்றை விழுங்கிவிட்டு, இங்கே வந்து குறிப்பு எழுதியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். முஸ்லிம்களின் அடையாளங்கள் இஸ்லாத்திற்கு எதிராக இருக்க முடியாது என்ற சிறு விடயம் கூடவா உங்களுக்கு புரியவில்லை?
இவர்களுக்கு புரிந்திருந்தால் நமக்கேன்( இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு) இந்த நிலைமை?
ReplyDelete