இலங்கையை இலக்குவைத்து இந்தியாவின் ஏவுகணைகள்..?
புதினப்பலகை
அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க, இரத்மலானை, மற்றும் மத்தால விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல் மின்நிலையம். கரவலப்பிட்டிய- களனிதிஸ்ஸ மின்நிலையங்கள் உள்ளிட்ட பல கேந்திர நிலைகளை இலக்கு வைத்தே இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணைத் திட்டத்தின் கீழ் இந்த அக்னி ஏவுகணைகள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் 1000 தொடக்கம் 2000 கிலோ எடையுள்ள அணுவாயுதத்தை சுமந்து கொண்டு 1000 தொடக்கம் 8000 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை விரிவாக்கப்பட்டுள்ளது.
அக்னி 5 ஏவுகணை மூலம் சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்கமுடியும்.
ஈரான், பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், மியான்மார் வழியான சீனாவின் விநியோகப் பாதையை துண்டிப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் இரகசியமாக இணைந்துள்ளன.
பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல்களை தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் இந்தியா விருத்தி செய்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வெளிப்படையாக நோக்குமிடத்து, இது மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வெறும் கற்பனைதான் என்று புரிகின்றது.
ReplyDeleteஆனாலும் இது கொமிசன் அடிப்பதற்கான நீண்டகால மூலதன திட்டமா என்று இப்பொழுதே சொல்ல முடியாதுள்ளது.
மேற்படி கற்பனைச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ள, ஏவுகணை அபாயத்தில் உள்ள இடங்களில், இராணுவத் தலைமையகத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களுமே பொதுமக்களுடன் தொடர்பு பட்ட இடங்கள்.
ஆகவே, 'இலங்கைக்கு ஏவுகணை அச்சுறுத்தல் உள்ளது' என்று மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதில் அதனை பதிய வைத்துவிட்டு, பின்னர், 'ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்புத்திட்டம்' என்ற பெயரில், சீனாவுடன் ஒப்பந்தம் பண்ணி, மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்து, அதில் கொளுத்த கொமிசன் அடித்து, அந்த கொமிசன் பணத்தில் வெளிநாடுகளில் உல்லாச ஹோட்டல்கள் கட்டும் திட்டத்திற்கான ஆரம்ப முதலீடாகக் கூட மேற்படி சிங்கள செய்தி ஊடகத்தின் செய்தி இருக்கலாம்.