Header Ads



கண்ணைத்திறந்து சுற்றிப்பார்த்து விட்டு வாக்களியுங்கள் - ஆசாத் சாலி

 
அபு ஆதில்

தற்போது ஊடகங்களில் அதிகம் பேசப்படுபவரும் கொழும்பு மாநகரின் முன்னாள் பிரதி மேயரும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவருமான ஆசாத் சாலி அவர்களுடனான நேர்காணல்:

அண்மைக்காலமாக இலங்கையில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டும் முஸ்லீம்களது மதக்கடமைகளை நிறைவேற்றுவதில் சிலரால் தீங்கு விளைவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பின்னணியில் இது தொடர்பில் நீங்கள் கருத்து வெளியிட்ட போது உங்களையும் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமையும்  இனவாதம் பேசிவருவதாக கூறப்படுகிறதே இது தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

எங்களது பள்ளிவாசல்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோது நாங்கள் தன்மானம் உள்ள முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் எங்களது மதச்சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அடாவடித்தனங்களை நிறுத்துமாறே கருத்துக்களை  வெளியிட்டோம். இந்த நாட்டில் வாழும் அநேக பௌத்தர்கள் எங்களுடன் சகோதர உணர்வுடனே நடந்து கொள்கின்றனர். ஒரு சில துறவிகளே இப்படியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தொடர்பிலேயே நாங்கள் கருத்துக்களை வெளியிட்டோம்.

அன்மையில் 25 பேர் கொண்ட துறவிகள் குழு ஒன்றினால் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் நாங்கள் இனவாதம் பேசி வருவதாகவும் எங்களுக்கு வரலாறு புரிய வில்லையாம் அதனால் ஆசாத் சாலிக்கு வரலாற்றை சொல்லித்தருவதர்க்காக சவூதி அரேபியாவிலேனும் விவாதிக்க தயாராய் உள்ள தாகவும் கூறியுள்ளார்கள். நான் அவர்களிடம் கூறியுள்ளேன் உங்களை சவுதியில் உள்ளே எடுக்க மாட்டார்கள் ஆதலால் நான் இலங்கையில் எந்தப்பாகத்திலும் அவர்கள் அழைக்கும் இடத்தில் அவர்கள் விரும்பும் தொலைக்காட்சியிலோ அல்லது வானொலியிலோ விவாதிக்க தயாராய் உள்ளேன் என்று அவர்களுக்கு சவால் விட்டுள்ளேன்.

ஏற்கனவே எங்களது மறைந்த தலைவர் மர்ஹூம்.எச்.எம்எம். அஷ்ரபுடன் சோம தேரர் விவாதித்து தோற்றுப்போனதை மறந்து என்னுடன் விவாதத்துக்கு அழைத்துள்ளார்கள் நிட்சயம் தோற்றுப்போவார்கள் அவர்கள் விவாதத்துக்கு வர வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன்.

முஸ்லீம்கள் தொடர்பில் சில வரலாற்று உண்மைகளை நான் அவர்களுக்கு சொல்ல வேண்டிய கடமைப்படிலும் உள்ளேன் ஆகையால் அவர்கள் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்தால் நான் மனமுவந்து விவாதக்க தயாராய் உள்ளேன். கண்டியில் பெரஹர உற்சவம் நடத்துவது அன்றைய கண்டி மன்னனது மகளுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்தியதர்க்காக அந்த முஸ்லீம்களை கெளரவப்படுத்துவதர்க்காகத்தான் என்பதை எனக்கு வரலாறு கற்பிக்க வருபவர்கள் உணர வேண்டும் இது ஒரு சாதாரன விடயம் அண்மையில் ஜெனீவாவில் நமது நாட்டுக்கு ஆபத்து என்ற போது அதிகமாக வீதிக்கு இறங்கி போராடியவர்கள் முஸ்லீம்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

நாங்கள் வெள்ளைத்தொப்பியயும் வெள்ளைசாரத்தையும் அணிந்துகொண்டு வீதிக்கு இறங்கியதன் பயனாகத்தான் முஸ்லீம் நாடுகள் நமது நாட்டுக்கு ஆதரவளித்தன என்பதையும் எங்களது தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் ஜெனீவா சென்று அங்கு வெளிநாட்டு தலைவர்களுடன் கலந்த்துரயாடி முஸ்லீம் நாடுகளின் உதவிகளை நமது நாட்டுக்கு பெற்றுக்கொடுத்தனர் என்பதை  எங்களுக்கு வரலாறு கூற வருபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்க இருந்த வேளையில் பிரித்தானியர் எங்களது ரீ.பி.ஜாயா அவர்களை அழைத்து நாங்கள் உங்களது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்போகின்றோம் நீங்கள் ஏதாவது எதிற்பர்க்கிண்றீர்களா? எனக்கேட்ட போது ரீ.பி.ஜாயா என்ன கூறினார் தெரியுமா? இது எங்களது நாடு இங்குள்ள தலைவர்கள் எங்களை நல்ல முறையில் தான் நடாத்துகின்றார்கள் என பண்புடன் கூறியுள்ளார். அப்போது இருந்த தலைவர்கள் எங்களுக்கான மரியாதையைத் தந்தார்கள் தான் ஆனால் இப்போது உள்ள தலைவர் எங்களுக்காக ஏதாவது செய்துள்ளார? எங்களது பள்ளிவாசல்கள் சில தீவிர போக்குக்கொண்ட துறவிகளால்  தாக்கப்படும் போது வாய் திறந்துள்ளார? என ஜனாதிபதியை தூக்கிப்பிடிக்கும் எங்களது முஸ்லீம் அமைச்சர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்.

ஜனாதிபதி செய்ததெல்லாம் பாலஸ்தீனர்களின் நண்பன் என தன்னைக்காட்டிக்கொண்டு முஸ்லீம்களின் பரம எதிரியான இஸ்ரேலார்களை இங்கு முகாமிட வைத்து தற்போது முஸ்லீம்களுக்கு எதிரான குழிபறிப்புக்கள் அரன்கேறிக்கொண்டு இருக்கின்றன. இஸ்ரேலார்கள் இங்கு வந்ததன் பின்னர்தான் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரான நீங்கள், அரசாங்கத்துடன் இணைந்து கொழும்பில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தீர்கள் திடீரென உங்களிடமிருந்த மாநகர சபை உறுப்பினர் பதவியையும் துறந்து கிழக்கு மாகான சபைத்தேர்தலில் போட்டியிட காரணம் என்ன?

நாடு இப்போதுள்ள சூழலில் நமது முஸ்லீம்கள் ஒன்று பட வேண்டும் அதனுடாகவே எதிர்காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக அரங்கேறிக்கொண்டிருக்கும் அட்டுழியங்களை தடுத்து நிறுத்தலாம். அரசாங்கத்தின் தயவில் அரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் முஸ்லீம் அரசியல் வாதிகளால் முஸ்லீம்களுக்கு சாதகமான எந்தக்கருத்துக்களையும் வெளியிட முடியாதுள்ளது. இதன் பிரதிபலிப்புத்தான் அதாவுல்லா பள்ளிகளுக்கு எதுவுமே நடக்கவில்லை என்று கூறும் கருத்தும் ஹிஸ்புள்ளா தம்புள்ளை பள்ளியில் ஒன்றுமே நடக்கவில்லை என்ற கருத்தும்.

சம்பவத்தை நேரடியாக கண்டும் நடக்கவில்லை எனக்கூறுவதானது மரணத்தை மறந்த கதை பள்ளி விடயம் கண்டும் காணவில்லை என்றால் கண் அவிந்துவிடும். இங்கு அநேக அமைச்சர்களை தவறு செய்ய விட்டு விட்டு அவர்களுக்கு எதிராக பைல்களை வைத்துக்கொண்டு அடக்கி வைத்துள்ளதுதான் இப்போதுள்ள அரசாங்கத்தின் புத்திசாலித்தனம். எங்களுக்கு எதிராக எந்த பைல்களும் இல்லை அதனால் தான் நாங்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியீடுகின்றோம். எங்களுக்கு இறைவனைத்தவிர வேறு யாருக்கும் பயமில்லை. மரணத்தை சுமத்துகொண்டு திரியும் நான் மரணத்துக்கும் பயப்பட வில்லை.

தனது முன்றாவது ஆட்சியில் ஒரு அரசனைப்போன்று செயற்படும் நோக்கிலேயே ஜனாதிபதி தற்போது தனது காய்களை நகர்த்தி வருகின்றார். சிறிய கட்சிகளுடன் பேசவேண்டிய தேவை தனக்கில்லை என்ற நிலையில் உள்ள ஜனாதிபதிக்கு இந்த கிழக்கு தேர்தலின் போது சிறந்த பாடத்தைப்புகட்ட இந்த கிழக்கு மக்கள் தயாராக வேண்டும். நமது பள்ளிவாசல்களை உடைப்பதற்கு எதிர்ப்பை இந்தத்தேர்தல் ஊடாக நாங்கள் தெரிவித்தே ஆக வேண்டும்.

நான் எப்போதும் முஸ்லீம்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபாவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என முயற்சிப்பவன் அந்த அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் அவர்களை ஒன்ருகூட்டியுள்ளேன் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அதாவுள்ளா போன்றோர் கடைசி வேளையில் பின்கதவால் சென்ற வரலாறுகளே அதிகம்.
 
அரசாங்கத்துடன் உள்ள அமைச்சர்கள் விசேடமாக அதாவுல்லா, ரிசாத், ஹிஸ்புல்லா, அஸ்வர் போன்றோர் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்காக தனித்து போட்டி இடுகிறார் என கூறுகிறார்களே இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?
 
இது தேவையற்ற நகைப்புக்குரிய கருத்து முஸ்லீம் காங்கிரஸ் கடைசிவரையும் அரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பி இருந்தது அதன் உயர்பீடம் கூட இரண்டு முறை அதர்க்கு அனுமதி வழங்கி இருந்தது .

ஆசனப்பங்கீடு மற்றும் சில ஒப்பத்தங்களில் கைச்சாத்திடல் போன்ற விடயங்களில் முரன்பட்டதாலேயே தனித்து போட்டியிட தீர்மானித்தது அதுவும்  ஜனாதிபதியின் அனுமதியுடனேயே போட்டியிடுகிறது. இவர்கள் பிதட்டித்திரியும் கருத்துக்களை அரசு உத்தியோக பூர்வமாக எங்கும் அறிவிக்க வில்லை. தலைவர் இப்போதும் அரசுடன் தான் இருக்கிறார் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரவூப் ஹக்கீம் நினைத்த மாத்திரத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது என்பது சாதாரண விடயமல்ல. வடக்கும் கிழக்கும் இணைவது என்ற பயத்தை விட முஸ்லீம் காங்கிரசும் தமிழ் கூட்டணியும் இணைந்து விடுமோ என்ற பயமே இப்போது அரசாங்கத்திடம் இருக்கின்றாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பங்கி மூன்னின் தருஸ்மென் அறிக்கையை அரசு முற்றாக நிராகரித்த அதே வேளை LLRCயை அரசு கொண்டுவந்தது இந்த LLRCயை மஹிந்த சமர சிங்கவை வைத்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசியது  இதனை நாங்கள் நடைமுறை படுத்தப்போகின்றோம் என்று கூறினார்கள். பின்னர் நாட்டுக்கு வந்து பாராளமன்றத்தில் வைத்து நிமால் சிறிலால டி சில்வா கூறுகிறார் LLRCயை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது என்று இதன் பின்னர் தான் நான் அறிக்கை விட்டேன் அரசாங்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருத்துக்களை வெளியிடாமல் ஏதாவது ஒன்ரைக்கூறவேண்டும் என்று இங்கு அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இவர்களது நிலைப்பாடு தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ எவ்வித தீர்வையும் வழங்காது இளுத்தடிப்பதுதான். அன்று இரவோடிரவாக மூதூர்க்கு சென்று தனி முஸ்லீம் பிரதேசத்தில் புத்தரின் சிலையை வைத்துள்ளார்கள். இப்படியான அத்து மீறல்களை தன்மானமுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஹஜ்விடயத்தை எடுத்துக்கொண்டால் காதரையும் பௌசியையும் இணைத்தலைவர்களாக போட்டு அவர்கள் இருவரையும் மோத விட்டு எங்களை ஹஜ்ஜுக்கு போக விடாமல் தடுக்கும் முயற்சிதான் இப்போது நடைபெறுகிறது.

வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தை எடுத்துக்கொண்டால் அது விடத்தில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. என்றாலும் நாங்கள் எப்போதும் தமிழர்கள் முஸ்லீம்கள் என்று அடித்துக்கொண்டு இருக்க முடியாது நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுவே காலத்தின் தேவை. வடக்கு கிழக்கு இணைப்பு விடையத்தில் ஹக்கீம் ஒன்றைக்கூறுகின்றார். சம்மந்தன் ஐயா ஒன்றைக்கூறுகின்றார் முஸ்லீம்கள் ஒன்றுபட வேண்டும் அதன்பின்னர்தான் தமிழர்களும் முஸ்லீம்களும் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நன்றாக கண்களைத்திறந்து சுற்றிப்பார்த்து விட்டு வாக்களியுங்கள். அந்தப்பார்வையில் நீங்கள், உங்களது குழந்தைகளின் எதிர்காலம், நீங்கள் சார்ந்த சமூகம், உங்களது பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதன் பின்னணி, நீங்கள் ஒற்றுமைப்பட்டிருக்கிண்றீர்கள் என்பதை சர்வதேசத்துக்கு சொல்லும் செய்தி, பர்மா போன்ற நாடுகளில் பௌத்த துறவிகளால் முஸ்லீம்களுக்கு எதிராக நடாத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பைக்காட்டும் ஆயுதம் என்றல்லாம் யோசித்துக்கொண்டு வாக்களியுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் மழை பெய்தால் வெளியேற முடியாதநிலை. இலங்கையில் ஒரு இடத்திலும் இல்லாதநிலை, குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை ஆனால் வீட்டுக்காரர்களிடம் சென்று 500 ரூபாய் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறார்கள். இது காத்தான்குடியில் நடைபெறுகின்றது. அபிவிருத்திக்கு வாக்களிப்பது என்றால் அம்மாந்தோட்டை மாவட்டத்துடன் உங்களது பிரதேசத்தை ஒப்பிட்டுப்பாருங்கள். இங்கு அங்குள்ள தரத்துக்கு பாடசாலைகள் இருக்கின்றதா? விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றதா? வீதிகள் இருக்கின்றதா? பாரிய அபிவிருத்திகள் நடந்துள்ளதா? யோசித்துப்பாருங்கள்.

கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் இந்தத்தேர்தலை சாதாரண தேர்தலாகக்கருதாமல் நேரகாலத்தோடு சென்று முஸ்லீம் காங்கிரஸின் சின்னமான மரத்துக்கு வாக்களித்து எங்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் முழுஉலகத்துக்கும் காட்ட வேண்டும்.
 

 

6 comments:

  1. நன்றாகச் சொன்னீர்கள் அடித்துச் சொல்லுங்கள் உங்களைப்போன்றவர்கள் கருத்துக்களை வெளியீடும் போதாவது இன்குள்ளதுகளுக்கு ரோசம் பிடிக்குதா எனப் பார்ப்போம் முஸ்லீம்களை மோதவிட்டு புதினம் பார்க்கும் டாப்பர் மாமா மாருக்கு இந்தமுறை கிழக்குமக்கள் சிறந்த பாடத்தைப்புகட்டுவார்கள்
    ஹிஸ்புல்லா தம்புள்ளைக்கு போய் பார்த்து விட்டு அங்கு ஒன்றும் நடக்க வில்லை என்று கூறினார்.
    பர்மாவில் முஸ்லீம்களின் மீது கைவைத்தவர்களை அல்லாஹ் வெள்ளத்தைக்கொண்டு தற்போது தண்டிக்கின்றான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி தெய்வமும் அன்றே கொல்லும் என்பது புதிய பழமொழி

    ஆசாத் சாலி அவர்களே இந்த சமூகத்தை ஒற்றுமைப்படுத்த நீங்கள் எடுத்துள்ள முயற்சி தொடர எனதும் உண்மையை நேசிப்பவர்களதும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மட்டக்களப்பு மக்கள் மிகுந்த பண்பானவர்கள் அவர்க்கும் உங்களுக்கு ஒரு தெரிவு வாக்கை வழங்கி உங்களது சமூக ஒற்றுமை என்ற கோசத்துக்கு ஒத்துழைப்பார்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எங்களது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்” என்று தற்போது அரசியல் இலாபத்திற்காக வாய்கூசாமல் கூறுவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா ?.உங்கள் வாய்ச்சவாடல்களுக்கு ஏமாற மட்டக்களப்பான்கள் மடையன்கள் அல்ல என்று செப்டம்பர் 9ம் திகதி உங்களுக்கு புரிந்துவிடும்.

    ReplyDelete
  4. அசாத் சாலியாரே, உமக்கு மிளகா அரைக்க மட்டக்கிழப்பார்ர தலையே கிடைச்சது?
    ஏனப்பு, கொழும்பார்ர தலையிலே அரைக்க விடுகினமில்லையோ?

    ReplyDelete
  5. Do you contest for the sake of Muslim community or the sake of your personal profile. Earlier UNP then PA Now SLMC Next?

    How can the people believe You Sir.

    Deen

    ReplyDelete
  6. கருத்துக்கள் எல்லாம் சூபர். அநேகமானவை உண்மை. ஆனால் நீங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வர அதிக காலம் எடுத்துள்ளீர்கள்... கூறியவற்றில் பல விடயங்கள் உங்கள் அன்றைய கால நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண். அதற்காக நிலைப்பாட்டை சரிப் படுத்திக் கொண்டது தப்பு என்று சொல்லவில்லை. விடயம் என்னவென்றால் இந்நிலைப்பாட்டுக்கு நீங்கள் வந்தது மக்களின் நலன் மற்றும் சரியான நிலைப்பாட்டின் பக்கமுள்ள அக்கறையா? இல்லாவிடில் உங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டா? I mean, is that a political move? என்னவோ, ஏதோ இறையச்சத்துடன் நடந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது. யாராலும் எவரையும் காப்பாற்ற முடியாத அந்நாளை அரசியல் வாதிகள் மட்டுமல்ல நாமும் பயந்து அதை நம் வாழ்வின் நடைமுறையில் காட்டினால். அல்லாஹ் போதுமானவன் நம்மைக் காப்பாற்ற. நாமும் உயிரோட்டமுள்ள சமுதாயமாய் மாறலாம். அந்நியர்களை அணு அணுவாய் பின்பற்றிக்கொண்டு நம்மால் எதுவும் செய்ய முடியாது. ரசூலுல்லாஹ் சொன்னது போல் "வெள்ளத்தில் அடிபட்டுப் போகும் சருகுகளாய் " கேவலப் பட வேண்டியது தான். சருகு என்ற நிலையில் இருந்து கல்லாய் மாற வேண்டும் என்றால், அல்லாஹ்வின் தூதர் சொன்னது போல் "உலகத்தைப் பற்றிய ஆசை - மரணத்தைப் பற்றிய பயம்" இவை ரெண்டையும் விட்டுத் தொலைப்போம். அரசியல் வாதிகளையோ, மற்றவர்களையோ திருத்துவது நம்மால் முடியாத காரியம். ஆனால் நம்மை நாம் திருத்திக் கொள்ளலாமே!!! அரசியலில் நம்பிக்கை ,எதிர்பார்ப்பு இவை எல்லாம் காலம் சென்ற அஷ்ரப் அவர்கள் இருக்கும் போது கொஞ்சமாவது இருந்தது.. இப்பொழுது உள்ள எல்லா அரசியல்வாதிகளும் செய்வதெல்லாம் அவரை விற்று அரசியல் செய்வது. இவர்கள் என்ன செய்தார்கள்???... பூச்சியம்...

    ReplyDelete

Powered by Blogger.