இதுதான் அமெரிக்காவின் திமிர்...!
அமெரிக்கா தலைமையில் உலகம் செயல்படவில்லை என்றால், உலகம் மோசமான மற்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா கன்வென்சன் மையத்தில் பத்திரிகையாளர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் -பெண் பாகுபாடு, அரபு நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஈராக்கில் தற்போது தான் மெல்ல மெல்ல வரும் ஜனநாயகம், ஈரான் மற்றும் சிரியா நாட்டை ஆளும் சர்வாதிகாரிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உள்ளிட்டவைகள் நிகழ்ந்துவரும் போது, இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை என்ன என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரைஸ் கூறியதாவது,
அமெரிக்காவின் தலைமையில் உலகம் செயல்படும் பட்சத்தில், சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அனைத்து நாடுகளும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான சூழல் உருவாக்கப்படும், இது தவறும் பட்சத்தில், உலகம் மோசமான மற்றும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்படும் என்று அவர் கூறினார்.
Post a Comment