Header Ads



அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதிமன்றம் பிணை வழங்கியது

 
TM + யூசுப் மரைக்கார்

மன்னார் நீதவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில்  இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் றிஷாட் பதியுதீனை பிணையில் செல்வதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.
 
நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகுமாறு கோரி அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் ஆஜரானார்

அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜரானவேளை 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா சரீர பிணையிலும் செல்ல மன்னார் மேலதிக நீதவான் திஸநாயக்க அனுமதியளித்தார்.
.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்.

    அமைச்சருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அநீதிபதிக்கு எதிராக பதில் வழக்கு பதிவு செய்யப் படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து, பிரார்த்தனைகளுடன் காத்திருப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.