கிழக்கு மாகாண தேர்தலை முன்னிறுத்தி...!!
றவூப் ஸென்
எப்போதும் இரண்டு வகையான தலைவர்கள் உள்ளனர். ஒருவர் ஆட்டு மந்தையை இட்டுச் செல்வதில் குறியா இருப்பவர். மற்றவர் ஆட்டு ரோமத்தில் கண்ணாயிருப்பவர். -புரில்பன் ஷீன்-
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு தெஹிவளையில் பள்ளி சேதப்படுத்தப்பட்ட பின்னர் பலமுறை பாராளுமன்றம் கூடியுள்ளது. ஒரு அமைச்சரேனும் இது குறித்து பாராளுமன்றத்தில் ஒரு ஒற்றைவார்த்தையேனும் பேசினார்களா? குறைந்தபட்சம் ஒரு கண்டனத் தீர்மானமேனும் வெளியிட்டனரா? இல்லையே! அப்படியானால் இவர்களை இதற்கு மேலும் நாம் எப்படி நம்புவது?
கிழக்கின் மாகாண சபைத் தேர்தல் களம் சூடேறி வருகின்றது. ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்படும் வெற்று வாக்குறுதிகள், அதிரடி அபிவிருத்தி முன்னெடுப்புகள், சமூகப் பிரச்சினைகள் குறித்த அக்கறைகள், நினைத்துப் பார்க்க முடியாத அரசியல் போராளிகள், வா வீச்சுகள், அறிக்கைப் போர்கள் என்று கட்சிகளிடையேயும் தனி மனிதர்களிடையேயும் எத்தனை மாறுபாடுகள், வேறுபாடுகள்?
துரோகத்தாலும் சூழ்ச்சிகளாலும் சூழ்ந்துள்ள இலங்கை தேசிய அரசியலில் போலி வாக்குறுதிகளாலும் வா வீச்சுகளாலும் முஸ்லிம்கள் மீளவும் வீழ்த்தப்படுகின்றனர். அபிவிருத்தி அரசியல் எனும் மாயை காட்டி ஆசனங்களைத் தக்க வைக்கும் அதிகார விளையாட்டில் நமது அப்பாவி மக்கள் பலியாக்கப்படப் போகின்றனரோ எனும் அச்சமே நமக்குள் பரவுகின்றது.
அபிவிருத்தி என்பது நமது உரிமைகளின் பாற்பட்ட எப்போதைக்குமான போராட்டத்தின் சாரம். இயல்பான நியாயமான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியைக் கையில் வைத்திருக்கும் தேசிய அதிகார மையங்கள் சிறுபான்மைக்கு பிச்சைபோட்டு அவர்களது வாக்குகளை வளைத்துப் பிடிக்கும் சூதாட்டமாகவே இந்த அபிவிருத்தி அரசியலை சாதுர்யமாகக் கையாள்கின்றனர். வீதி போடுவதும் பாலம் கட்டுவதுமே நமது அடிப்படைத் தேவைகளா? அது அடிப்படை அரசியல் உரிமையா? என்ற கேள்விக்கு நமது அரசியல் தலைவர்கள் ஆம் என்று பதில் தருகின்றார்கள்.
இந்தத் தூரநோக்கற்ற, பின்னால் ஓடும் அரசியல் பண்பாடு நீண்ட காலத்தில் ஒரு அடிமைச் சமூகத்தையே உருவாக்கிவிடும். 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து அமுலுக்கு வந்த இந்த மாகாண முறையினால் வடக்கு கிழக்கு மக்கள் அடைந்த பலாபலன்கள் என்ன? எந்த சிறுபான்மை மக்களுக்கு மாகாண சபை முறை தீர்வாக முன் வைக்கப்பட்டதோ அந்த இரு மாகாணங்களையும் தவிர ஏனைய மாகாணங்களில்தான் இன்று அது வெற்றியளித்துள்ளது.
கடந்த மாகாண சபை அமுலில் இருந்தபோது முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினர்களும் இங்கு நிருவாகத்தைக் கொண்டுசெல்ல முடியாது ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ஆளுனர் எல்லா விடயங்களிலும் தலையீடு செகின்றார் என்று எத்தனைமுறை அறிக்கைவிட்டார்கள், கொதித்தெழுந்தார்கள் என்று நமக்கு நினைவிருக்கின்றது.
மத்திய அரசின் கைகளில் கட்டப்படும் ஒரு பொம்மை முதலமைச்சரை பூச்சாண்டி காட்டி சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாக படம் காட்டும் அரசாங்கத்தில் வெட்கம் கெட்டு ஒட்டியிருக்கும் நமது ‘தானைத் தளபதிகள்’ மக்களை எதை நோக்கி இட்டுச் செல்லப் போகின்றனர்? குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்துடன் கூடிய சிங்கள கவர்னரின் தலையீடுகளற்ற சுதந்திரமாக செயற்பட இடமளிக்கப்படுகின்ற மாகாண சபையையேனும் நமது தலைவர்கள் கோரியுள்ளனரா?
கிழக்கில் 2011 இன் சனத்தொகைக் கணிப்பீட்டின்படி திருகோணமலை மாவட்டத்தில் 48% முஸ்லிம்களும், அம்பாறையில் 45% முஸ்லிம்களும் மட்டக்களப்பில் 24% முஸ்லிம்களும் வாழ்கின்றனர். ஆனால் இந்த சனத்தொகை வீதாசாரத்திற்கேற்ற நிலம் அவர்களிடம் உள்ளதா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் 24% முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் வெறும் 6% ஆன நிலங்களே அவர்களிடமுள்ளது. இந்த கையறு நிலையால் சிங்களவர்களின் மாவட்ட சனத்தொகை 1% என்று புதிய தொகை மதிப்பீடு கூறுகின்றது. ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சோந்தமான பல்லாயிரம் ஹெக்டெயர் நிலங்களை இனவாத சக்திகள் விழுங்கி ஏப்பமிட்டுள்ளனர். இந்த நில ஆக்கிரமிப்பு இன்றும் நின்றபாடில்லை. அப்படி இருக்கும் போது முஸ்லிம் முதலமைச்சர், தமிழ் முதலமைச்சர் என்று நாம் கூச்சல் போடுகின்றோம்.
ஒரு பிராந்தியத்தின் கூட்டு மொத்த அரசியல் அபிலாஷைகள் என்ன? அதை எப்படி நாம் அடைந்து கொள்ளலாம்? அதற்கான பொறிமுறைகள் எவை? என்பதை விடுத்து ஊருக்கொரு மந்திரி கிராமத்திற்கொரு உறுப்பினர் என்பதைச் சுற்றியே நமது சிந்தனை சுழல்கின்றது. இது நமது அரசியலின் பேரம் பேசும் ஆற்றலை மழுங்கடித்து நாம் சோரம் போகும் அடிமை நிலையைத்தான் உருவாக்கி விடும் என்பதை மறந்து விடுகின்றோம்.
நமது இன்றைய அரசியல் களத்தில் நன்கு வெளித்தெரியும் ஒரு கசப்பான உண்மை இது. பிரதேசவாதம் இலங்கையில் முஸ்லிம்களைப் போன்று வேறெந்த சமூகத்திடமும் உக்கிரமாக இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் நலன்களையும் நன்மைகளையும் சிந்திக்கிறோம். இதனால்தான் உதைப்போருக்கும் கொடுங்கோலர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எமது மக்களின் பெறுமதியான வாக்குகளைத் தாரை வார்க்கின்றோம். நாம் 13 ஆம் திருத்தத்தையும் சுதந்திரமான மாகாண சபை அதிகாரங்களையும் வேண்டி நிற்கும் போது பேரினவாதிகள் வீதி போட்டுத் தருவதாக நிதி ஒதுக்குவதைக் கண்டு அடங்கிப் போகின்றோம். பால் கேட்டு அழும் பிள்ளைக்கு மிட்டா போடும் இந்த ஏமாற்று வித்தையை நாம் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம்?
ஒவ்வொரு தேர்தலும் நமது தலைவர்களுக்கு தந்திரங்களையும், கபடத்தனங்களையுமே கற்றுத் தருகின்றது என்பதற்கு இந்தத் தேர்தலும் ஒரு சிறு உதாரணம் மட்டுமே. கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்குப் பின்னர் அமைச்சரவையால் மாற்றம் வரப் போகின்றது. அந்த மாற்றம் தமது அமைச்சர் பதவிகளுக்கு ஆப்பு வைக்கலாம் எனும் அச்சத்தினால் தேர்தலுக்குப் பின்னர் மு.கா. அரசுடன் தான் இணையும் என்பது சந்தேகமில்லை. தேர்தலுக்கு பின்னர் மு.கா. பெரும்பான்மை பெறும் பட்சத்தில் அதற்கு ஒரு முதலமைச்சர் பதவி கிடைக்க வாப்புள்ளது.
அவ்வாறு முஸ்லிம் முதலமைச்சர்தான் வழங்கப்பட்டாலும் எதைச் சாதிக்கப் போகிறார்கள்? ஓவு பெற்ற இராணுவத் தளபதி ஒருவர் கவர்னராக இருக்கும் நிலையில் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டே அதிகாரங்களுக்கு தலையாட்டுவதைத் தவிர அவர்களால் எதைத் தான் செய முடியும்.
முஸ்லிம் முதலமைச்சரை வைத்துக்கொண்டே முஸ்லிம்களின் காணிகளை சூறையாடப் போகின்றனர். கடல் வளத்தையும் காட்டு வளத்தையும் கட்டுப்படுத்தப் போகின்றனர். வீதியையும் பாலத்தையும் காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவிதியோடு பேரினவாதம் விளையாட துணை போகப் போகின்றனர். இதற்கு வெளியில் அவர்கள் எதையும் செயப் போவதில்லை. அரசியலைத் தொழிலாக மேற்கொண்ட பின் நேர்மையாக நடத்தல் சாத்தியமேயில்லை என்பதுதான் நமக்கு கிடைக்கும் கடைசி முடிவு.
ஆனால் இந்தத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவதன் மூலமும் பெரும்பான்மையைப் பெறுவதன் மூலமம் ஒரேயொரு செதியை உலக நாடுகளுக்குச் சோல்ல முடியும். கிழக்கில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மை என்ற உண்மையை தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிக்க முடியும். சென்ற தேர்தலில் முதலமைச்சர் பதவி மீது அழுத்தங்களைப் பிரயோகித்த இந்தியாவுக்கு அது உணர்த்தும் செதி மிகவும் முக்கியமானது. சர்வதேச ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிராக சதிவலை பின்னும் சக்திகளுக்கு இது கற்றுத்தரும் பாடமும் முக்கியமானது. ஆனால் இதற்கு வெளியில் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைக்காக நடாத்தப்படும் இந்த தேர்தலில் கிழக்கு முஸ்லிம்களுக்கு உருப்படியாக எதுவும் கிடைத்து விடப் போவதில்லை.
மொத்தத்தில் கிழக்கின் அரசியல் தலைவர்களோ தெற்கிலுள்ள அரசியல் தலைவர்களோ தூரநோக்கற்றவர்கள். நீண்ட கால இருப்பு குறித்த அக்கறையற்றவர்கள். முஸ்லிம் சமூகத்தின் உண்மையான நலன்களை விட தமது அரசியல் செல்வாக்கிலும் கதிரைகளிலுமே இவர்கள் குறியா இருக்கின்றனர். இவர்கள் ஆளும் கட்சியில் இருந்தால் என்ன? எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன? இரண்டும் ஒன்றே தான். இவர்கள் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன இரண்டும் சமானமே. இப்படி காரை பெயர்ந்து பல்லிளித்து நிற்கும் நமது அரசியல் நிறுவனத்தின் முன்னால் நமது மக்கள் தோற்றுத்தான் போவார்களா? அல்லது ஏதேனும் ஒரு புதிய அணுகுமுறை மலருமா என்பதுதான் நேர்மையும் கௌரவமும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் கேள்வியாக உள்ளது.
தேர்தல் முடிவு தான் பெரும்பான்மை முஸ்லிம்களென்று நிரூபிக்குமா அப்ப உத்தியோக பூர்வ சனதொகை கனிபீட்டு அறிக்கை எந்த பெருமானமும் அற்றதா??? ஆக மொத்ததில் எல்லோரும் சேர்ந்து பட்ட மரம் இனியாவது காய்கடும் என நம்ப்பி வாக்களிக்க சொல்றிங்களா இதட்கா இவ்வளவு சுத்திவளைப்பு?
ReplyDeletev nice Article
ReplyDelete”எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்பதுபோல அந்தச் செய்தியையாவது உலகத்துக்குச் சொல்வதற்கு அதாஉல்லா போன்றவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கின்றதே. இவர் என்னடா என்றால் ”வீடு எரியும் போது அதில் சுருட்டுப் பற்றவைப்பது” போலல்லவா கருமமாற்றுகின்றார்.
ReplyDelete