அதாவுல்லாவின் நாடகம்...!!
ஒமர் பாருக்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் தனது பங்கிற்கு ஐ.ம.சு.கூ. இல் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாஉல்லா ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டிருக்கின்றார்.
”கிழக்கு மாகாண சபைத் தேர்தல் – 2012, அக்கரைப்பற்று மக்கள் பிரகடனம்” எனும் தலைப்புடன் இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றது. தனது வேட்பாளர்களை வெல்லவைப்பதற்கான வியுகம் என தான் வகுத்திருக்கும் திட்டத்தை இதில் அமைச்சர் அதாஉல்லா விளக்கியிருக்கின்றார்.
இந்தத் துண்டுப் பிரசுரத்தின் இறுதிப் பகுதிதான் மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கின்றது. இப்பகுதியில் முதலாவதாக “கௌரவ செயலாளர், ஜம்இய்யதுல் உலமா” எனும் குறிப்புடன் மௌலவி ஏ.ஆர்.ஏ. மானாப்கான் கையொப்பமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்றிலுள்ள 11 பள்ளிவாயல்களின் செயலளர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தொடர்ந்து 13 வதாக ”வர்த்தக சங்கம் உட்பட ஏனய பல பொது நிறுவனங்களும் இதில் கையொப்பமிட்டுள்ளன” எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கையொப்பங்கள் இல்லை.
இதில் மு,கா, வேட்பாளரான தவத்தின் ஆதரவுக் கோட்டையான பத்ர் ஜும்ஆ பள்ளிவாயல் செயலாளரும் கையொப்பம் இட்டுள்ளார் என்பதே மக்களின் சந்தேகத்தைக் கிளறிய விடயமாகும். உண்மையில் இந்த ”இப்படிக்கு” பகுதி குறித்த பிரகடனத்துடன் தொடர்புடைய பகுதி அல்ல என்றும் குறித்த பிரகடனத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதில் காணப்படும் கையொப்பங்களுக்கு உரியவர்கள் சிலர் அறிக்கைகளைக் கசியவிட்டிருக்கின்றனர்.
எது எவ்வாறெனினும் குறித்த துண்டுப் பிரசுரத்தைக் கூர்ந்து நோக்கும்போது அமைச்சர் அதாஉல்லா செய்திருக்கும் கபடத்தனம் அம்பலமாகின்றது. இந்தத் துண்டுப் பிரசுரத்தின் முதல் பக்கமும் இரண்டாம் பக்கத்தின் ஆரம்பப் பகுதியும் publication software ஒன்றில் type செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கையொப்பத்துக்கான பகுதியோ JPEG image (.jpg) file type இல் அச்சிடப்பட்டுள்ளது. அதாவது இப்பகுதி வேறொரு கையொப்பமிடப்பட்ட ஆவணத்தின் பகுதி scan செய்யப்பட்டு பின்னர் cut and paste செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
அமைச்சர் அதாஉல்லாவின் மக்களை ஏமாற்றும் இந்த வித்தை அம்பலமாகியுள்ளதால் மக்கள் மேலும் விசனம் கொண்டுள்ளனர்.
இவர்களெல்லாம் அரசியல் வாதிகள். ஏமாளிகளுக்குப் பஞ்சமில்லாத உலகில், நிஜ வாழ்க்கையின் திறமையான நடிகர்கள்.
ReplyDeleteபள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்த்து மட்டுமல்ல,
இறைவனின் பெயரையே விற்று அரசியல் செய்யும் போலித் தலைவர்களும் காணப்படுகையில், இவர் தன் பங்குக்கு பள்ளித் தலைவர்களின் பெயரை விற்று இருக்கின்றார் போலும்.
ஓமர் பாரூக், செய்திக்கு வழிச் சேர்ப்பதற்காக துண்டுப் பிரசுரத்தின் பிரதியை இங்கே பிரசுரித்து இருக்க வேண்டும்.
பத்ர் நகர் எப்பொழுது தவம் அவர்களின் கோட்டையானது??? அக்கரைப்பற்றில் எந்தப்பகுதியும் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடையாது இதுதான் உன்மை..!
ReplyDeleteJaffnamuslim தனித்து அதாஉல்லா புராணாம் தான். அப்படி என்ன அதா என்ரால் எல்லோருக்கும் காய்ச்சல் . அக்கரைபற்று ஒற்றுமையின் சின்னம், ஏகோபித்த கருத்து இதில் என்ன சந்த்தேகம்?
ReplyDeleteதுண்டுப்பிரசுரங்களையும் மேடைப் புழுகுகளையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். அரசியல்வாதிகள் தமது பதவி காலத்தில் தமக்காக, தமது குடும்பத்துக்காக செய்துள்ளதையும் மக்களுக்காக, சமூகத்துக்காக செய்துள்ளதையும் ஒப்பிட்டுப்பார்த்து முடிவு செய்ய வேண்டும். முஸ்லிம்கள் மடையர்கள் அல்ல என்பதை உணர்த்துவோம்.
ReplyDelete