Header Ads



அடிபணிந்தது ஒலிம்பிக் குழு - இஸ்லாமிய ஆடையுடன் பளு தூக்கிய முஸ்லிம் சகோதரி


ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக முஸ்லிம்களுக்காக ஆடை விதி முறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி முழு உடல் முழுதும் மறைக்கும் உடையணிந்து ஒலிம்பிக் பளு தூக்குதலில் துனிஷிய வீராங்கனையான காதா ஹசீன் பங்கேற்றார்.

பளு தூக்குதலில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையில் உடையணியக் கூடாது என்பது பொதுவான விதி. ஆனால், இந்த விதியை மாற்ற வேண்டுமென கடந்த ஆண்டு முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக அமெரிக்காவால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி பளு தூக்குதலில் முழு உடை அணிந்து பங்கேற்கலாம் என விதி தளர்த்தப்பட்டது. அதன்படி ஒலிம்பிக் தொடரில் நேற்று நடந்த பளு தூக்கும் போட்டியில் முதல் முறையாக முழுமையாக உடலை மறைக்கும் உடையை அணிந்து பங்கேற்க துனிஷிய வீராங்கனைக்கு அனுமதியளிக்கப்பட்டது. 19 வயதாகும் காதா ஹசீன் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

3 comments:

  1. mashaallah,,,,

    ReplyDelete
  2. முஸ்லிம் பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

    இப்படியா ஹிஜாபைப் பேணுவது?

    அதுவும் புனித ரமளானில்!

    ReplyDelete
  3. thalya moodinal mattum hijab aayiduma? Summa thaan ketkiran. Ammani thalya moodina perum vetriya? ennala purinthu kollawe mudiyala...hm

    ReplyDelete

Powered by Blogger.