அணுசக்தி திட்டங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது - அயதுல்லா கொமேனி
ஈரான் நாட்டின் உயரதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா கொமேனி, இந்த மாநாட்டில் பேசியதாவது,
அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் எங்களுக்கு கிடையாது. அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டப் பணிகளை, ஒரு போதும் கைவிட முடியாது. அணு ஆயுதங்களை பெற்றிருக்கக்கூடிய மேற்கத்திய நாடுகள், உண்மையில் தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க மனமில்லை. மாறாக, எங்கள் நாட்டின் மீது ஏராளமான பொருளாதார தடைகளை திணித்து வருகின்றன. "அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது' என்று சொல்பவர்கள், அணு எரிபொருள் சப்ளை செய்வதை தங்கள் வசம் வைத்துக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கிறார்கள். அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதை நாங்கள் பாவமாக கருதுகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில், அணு ஆயுதமே இருக்கக்கூடாது, என்ற திட்டத்தை வற்புறுத்துகிறோம். அதே நேரத்தில், அமைதிக்கான அணுசக்தி திட்டத்தை பயன்படுத்த ஒவ்வொரு நாட்டுக்கும் உரிமை உண்டு. இவ்வாறு அயதுல்லா காமினி பேசினார்.
ஈரான் அதிபர் அகமது நிஜாத் குறிப்பிடுகையில், "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா, அமைப்பு ரீதியான முறையில் மக்களை கொன்று குவித்து வருகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் "வீட்டோ' அதிகாரம் பெற்ற நாடுகளுக்கு சாதகமாக தான் நடக்கிறது' என்றார்.
Post a Comment