இலங்கையில் நாளை ஞாயிற்றுக்கிழமை புனித நோன்புப் பெருநாள்..!
இலங்கை முஸ்லிம்கள் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை நாளை ஞாயிற்றுக்கிழமை, 19 ஆம் திகதி கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிறைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை மாலை வேளையில் நாட்டின் சில பகுதிகளில் தலைபிறை தென்பட்டுள்ளது. பிறை தென்பட்ட பகுதி மக்கள் இதனை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து நாளை இலங்கை முஸ்லிம்களை பெருநாளை கொண்டாடுமாறு ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்முறை புனித நோன்புப் பெருநாளை உலக முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Crescent Moon, அகில் அஹ்மத் ஷரீபுத்தீன் என்ற பெயர்களில், அல்லாஹ்வின் தூதர் தடுத்த வானசாச்திரங்களை பயன்படுத்திக் கொண்டு, இலங்கையில் வெற்றுக் கண்ணுக்கு பிறை தென்படாது என்று சொல்லிக்கொண்டு, அப்பாவி மக்களை மார்க்கத்திற்கு முரணான வழியில் இட்டுச் செல்ல முயன்றவர்களின் பொய்களை, இலங்கையிலேயே பிறையை வெற்றுக் கண்களுக்கு தென்பட வைத்து, அதனை ஜமியத்துல் உலமா மூலம் உறுதி செய்ய வைத்ததன் மூலம் அல்லாஹ் மக்களுக்கு முன் தோலுரித்துக் காட்டி விட்டான்.
ReplyDeleteஇவர்கள் இதன் பின்னராவது மார்க்கத்திற்கு முரணான அடிப்படைகளை உருவாக்கி மக்களை பிழையாக வழிநடத்தாமல் இருக்கட்டும்.
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உங்களின் பெருநாளை அல்லாஹ் மிக்க மகிழ்ச்சியானதாக ஆக்கிவைக்க பிரார்த்திக்கின்றேன்.