Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள போர்க்கொடி தூக்கியுள்ளனர் - மாவை சேனாதிராஜா

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடக்கூடாது, தமிழர்களுக்கெதிராக முஸ்லிம்கள் செயற்படக்கூடாது என்று  அண்மையில் முஸ்லிம் மக்கள் உணர்வுபூர்வமாகப் போர்க்கொடி தூக்கியமை முன்னரை விடவும் அற்புதமான சிந்தனையாகும். இந்தத் திடசங்கற்பம், உணர்ச்சிப் பிரவாகம் தேர்தலுக்குப் பின்னரும் முஸ்லிம் மக்களிடம் தொடர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பிரசாரக் கருத்தரங்கு கல்முனை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று தமிழ் மக்கள் மீது அரசும் பேரினவாதமும் தொடுத்து வரும் அநியாயங்கள், அடாவடித்தனங்கள், நில அபகரிப்புக்கள், மதச்சுதந்திரக் குறுக்கீடுகள் என்பன முஸ்லிம் மக்கள் மீதும் தொடுத்தவண்ணமுள்ளன. இதனால் நொந்து போயுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசின் உண்மையான இனவாத முகம் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இதனாலேயே அரசுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடக்கூடாது என்ற உணர்வுபூர்வமான கிளர்ச்சி முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. இந்த அற்புத புரட்சி காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது.

சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை பலமாக இருப்பதையும் நம் வாக்குப்பலத்தை ஒரு போதும் நாம் இழக்கக்கூடாது. ஆனால் இந்தப் பலத்தையும் இன  கட்டமைப்பையும் மாற்றி, கலப்பினமாக்கி பௌத்த இனமாக்குவதையே இன்று மஹிந்த சிந்தனை இலக்காகக் கொண்டுள்ளது. இனங்களின் அடையாளத்தை அழிக்கும் மஹிந்த சிந்தனை தொடரவேண்டுமா?
 
தமிழர்களின் வாழ்விடங்கள் பூர்வீக காணிகள் மட்டுமன்றி முஸ்லிம்களது வாழ்விடங்களும் காணிகளும் அரசினாலும், அதன் இராணுவத்தினாலும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இன்று அபிவிருத்தி பற்றிப் பேசுகின்றனர். உண்மையில் தமிழ், முஸ்லிம் மக்களின் சொந்த மண்ணில் பௌத்த சிலைகளை விதைப்பதும், சீனாவின் உதவியுடன் இராணுவ முகாம்களை அமைப்பதும் தான் அபிவிருத்தியாக நடைபெறுகின்றன.
 
நாம் சர்வதேச ஆதரவு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இழக்கக்கூடாது. இதன் மூலம் நாம் அடைய முனையும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முஸ்லிம் மக்களுக்கும் உரித்தானது. எனவே ஒன்றுபட்டு அரசியல் தீர்வில் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவோம். என்றார்.



2 comments:

  1. ஐயா மாவை, எல்லாம் வாஸ்த்தவம்தான் ஆனால் சிறிதரனைக் கொஞ்சம் அடங்கச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. கேக்கிற்வன் கேனபயல் என்டா எறும மாடு ஏரபிலேன் ஓட்டுமாம் ஆஹா...என்னமா கத அளக்கிறாங்க இவக ஆட்சியை பிடித்து முஸ்லிம்கள நாட்டாம செய்ய முஸ்லிம்கள் இவகட ஆட்சிக்கி ஆசபட்டு அரசுகெதிரா திரண்டனராம்? உரிமைவேண்டுமென்டா போராடுங்க??? 3வது உலக இராணுவத்தையே தோக்கடிச்சவங்களோட நீங்க போராடபோறிங்களா? என்ரெல்லாம் எள்ளி நகைடாடியோர் கடைசியில் எப்பாடு பட்டாவது எந்த வேஷத்த போட்டாவது முஸ்லிம்களை வெல்ல வேண்டிய மிக கேவலமான நிலையில் வந்து நிட்கின்றனர்


    முஸ்லிம்களின் ஆயிரகணக்கான ஏகர் நிலங்களை அபகரித்து இருப்பதும் மன்னார் உப்புகுளம் போல் ஏராளமான ஊர்களை ஆக்கிரமித்து இருப்பதும் 50,000 கோடிக்கு மேட்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளை இட்டு தங்களை வள்ர்துகொண்டிருப்பதும் 200 மேட்பட்ட மஸ்ஜிதுகளை உடைத்து நொருக்கி அவற்றுக்குமேலால் தங்கள் ஆலயங்களை எழுப்பியும் மயாணபூமி ஆக்கியும் மீண்டும் அவை மஸ்ஜிதுகளாக நிர்மானிக்கபட பல்வேறு தடைகள் போட்டு கொண்டிருப்பதும் வேலைவாய்பில் முஸ்லிம்களுக்கு உரிய நியமனங்களை நியாயமில்லாமல் எத்ர்துகொண்டிருப்பதும் சிங்களமக்கள் அல்லவே தமிழ் இனவாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தானே இதனை முஸ்லிம் சமூகம் மறந்து இவர்களுடனாவது கைகோர்பதாவது???


    கொலை செய்துவிட்டு அந்த பிணத்திடம் பறிதாபமாக கதைபதுபோல் எப்ப்டித்தான் இவ்வளவு அக்கிரமங்களையும் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாததுபோல் நா கூசாமல் இவனுகளால் கதைக்க முடிகிறதோ??? இவனுகள் செய்த செய்துகொண்டிருக்கிற அநியாயங்களுக்கும் கொடுமைகள் அட்டூழியங்களுக்கும் மத்தியில் தென் இலங்கையில் சிங்கள கடும்போக்குவாதம் செய்வதை ஒப்பிட்டால் அது ஒன்றுமே அல்லாத புறகனிக்கதக்கதாகவே விஞ்சி நிட்கிறது

    ReplyDelete

Powered by Blogger.