முஸ்லிம் காங்கிரஸ் பொய் சொல்வது கவலையளிக்கிறது - இது அஸ்வரின் வேதனை
TM
அரசாங்கம் பள்ளிவாயல்களை உடைக்கின்றது என்று கூறுபவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் நல்லம் என்றும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து அரசாங்கம் கூடாது என்றும் பொய் சொல்வதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
அரசாங்கம் பள்ளிவாயல்களை உடைக்கின்றது என்று கூறுபவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் நல்லம் என்றும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து அரசாங்கம் கூடாது என்றும் பொய் சொல்வதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் நேற்ற திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உரையாற்றுகையில்,
'இன்று பள்ளிவாயலை உடைக்கின்றார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்கின்றார்கள். இந்த நாட்டில் பள்ளிவாயல்களை உடைத்தது புலிகள்தான் என்று அவர்களுக்குத் தெரியாதா?
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் பின்னர் அப் பகுதியில் புலிப் பயங்கரவாதிகளால் உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் எத்தனையென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்குத் தெரியுமா?
அரசாங்கம் பள்ளிவாயல்களை உடைக்கின்றது என்று கூறுபவர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கம் நல்லம் என்றும் கிழக்கு மாகாணத்திற்கு வந்து அரசாங்கம் கூடாது என்றும் பொய் சொல்வதைப் பார்க்கும் போது கவலையாகவுள்ளது.
முஸ்லிம் காங்கரஸ் தலைமை இன்று ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுகின்றது.
கிழக்கு மாகாணத்திற்கு வந்து சிங்களவர்கள் பள்ளி வாயல்களை உடைக்கின்றனர் சிங்களவர்களைப் போன்ற மோசமானவர்கள் இல்லை என்று கூறிவிட்டு அநுராதபுரத்தில் விகாரைக்குப் பக்கத்தில் கூட்டம் நடாத்தும் போது சிங்கள மக்களைப் போன்ற நல்லவர்கள் கிடையாது என்று கூறி முஸ்லிம்கள் வெத்திலைக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றனர்.
அநுராதபுரத்தில் வெற்றிலை நல்லம் என்றால் அது எப்படி கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் கெட்டதாகி போகும் என்று முஸ்லிம் காங்கரஸ் காரர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்' என்று அவர் கூறினார்.
அப்பிடிப் போடு சக்கை, உப்ப நீரும் நாக்கப் பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கத் தொடன்கீட்டிர்.
ReplyDeleteஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
எமத்துரவயல் எல்லாருக்கும சேர்த்துத்தான் கேக்குறான்?
அழகான முறையில் கருத்துக்களைப் பதிய விடமாட்டீர்களடா!
ReplyDeleteயா அல்லாஹ் இது போன்ற ஓனாய்களிடத்திலிருந்து எங்களை காப்பாத்துவாயாக
முஸ்லிம்களே சிந்தியுங்கள் பின்னணியில் இருந்து செயற்படும் எதிரியை இனம் கானுங்கள் குர்ஆன் ஹதீஸுக்குள் இருந்தவாறு எவ்வாறு எதிரியை பிணன்னடையச்செய்யலாம் என்று.
சுதந்திரம் கிடைத்தது முதல்(அதற்கு முன்பும்) இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டே வந்தது அது மட்டுமல்ல வியாபாரத்தில்,கல்வியில்(நமது பொடுபோக்கும்தான்)வேளைவாயப்பில் என்று பல பக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பிடுங்குவதும்,புறக்கணிப்பும் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களாகிய நாம் காலடியை மட்டும் பார்க்கும் விதத்தை விட்டு விட்டு எம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையாவது சற்று நோக்க கடமைப்பட்டுள்ளோம்,அல்லாஹ் எங்களை நோக்கி சொல்கிறான் ஆட்டு மந்தைகள் போன்று நடக்காது சிந்தனையுள்ள சமூகமாக இருக்கும்படி.,இன்று ஆட்சியைப்பிடிக்க ஒரு இயக்கம் துடிக்கிறது,இன்னொரு இயக்கமோ துஆக்கள் மாத்திரம் போதும் என்கிறது சற்று சிந்தியுங்கள் எங்கள் ஊர்களில் உள்ள பள்ளிவாயில்களில் இஸலாம் நிலைநாட்டப்படும் வரை ஆட்சி என்பது எட்டாக்கனிதான்,கிலாபத் வீட்டுக்குள் அப்புறம் ஊருக்குள் அதன் பிறகு அல்லாஹ் உதவியுடன் உலகம் முழுவதும் வந்து விடும்.இன்று இஸ்லாத்தை பேச்சில் சொல்பவர்களிடம் அமல் இல்லை(நடைமுறையில் இல்லை),அமல் இருப்பவர்களிடம் அறிவு இல்லை,இவை இரண்டும் ஒன்று சேரனும். இங்கு இன்னும் ஒன்றை பதிவிட நினைக்கிறென், இன்று இருக்கும் இயக்கங்களின் பின்புலங்கள் நோக்கப்பட வேண்டும்.,குர்ஆன் ஹதீஸுக்குள் வர ஏன் தயங்குகிறார்கள் என்பதை மக்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள் அத்துடன் மக்களை திசை திருப்புவதில் ஏன் ஈடுபடுகிறார்கள்(சஹீஹான ஹதீஸ்கள் இருக்கும் போது(உண்மையான)லஈபான (பொய்கான) ஹதீஸ்கள் மூலம் அமல் செய்ய தூண்டுவது ஏன்?யாருக்காக?எதற்காக? இவர்களிடம் உண்மை இருந்தால் கேள்வி கேற்கும் போது கோபம் வராது,ஏன் கோபப்படுகிறார்கள்?ஏன் சிலரைத்தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்?யாருக்காக இவர்கள் வேளை செய்கிறார்கள்? இவர்களின் பசுத்தோல்கள் மக்கி மண்ணாகிப்போகும் காலம் வந்து விட்டது இவர்களாக உண்மையை உள்ள படி சொல்லவில்லை என்றால் அல்லாஹ் இவர்களை கேவலப்படத்தப்போவதை யாராலும் தடுக்க முடியாது அது மட்டுமல்ல மறுமையிலும், என்னையும் உங்களையும் வழிகேட்டில் இட்டுச்சென்றதற்காக(என்னை கடந்த பத்து வருடங்கள் வரை) வேண்டி நரக வேதனை இவர்களுக்குண்டு.
அல்லாஹ் எல்லோரையும் நல்வழிப்படுத்தனும் என்கிற துஆவுடன்
மாமோய் நாட்டில் நடக்கும் அநீதிகளை அமைச்சரவையில் இருந்தால் சொல்லக்கூடாது என சட்டமா? மாமா
ReplyDeleteஅப்போ நீங்க UNPல் இருந்து கொண்டு SLFPயை விமர்சித்தீர்கள் உங்களுக்கு நோய் இருக்கு மாமா தேசியப்பட்டியலில் MP தந்ததுக்காக ....ய கூட்டிக்கொடுங்க மாமா எங்கட சமுகத்த காட்டிக்கொடுக்காதிங்க மாமா முடிந்தால் ள யும் கூட்டிக்கொடுங்க தேமட்டகாக பள்ளி மட்டும்தான் பள்ளியா மாமா?...................
Mahinda is a very good boy - in cabinet meetings.
ReplyDeleteMahinda is a very bad boy - in election meetings in the East.
இக்றாம், நீங்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபிப்பிரயம் எழுதியபோது நம் நாட்டில் பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதனை ஒப்புக் கொண்டிருந்தீர்கள். இப்போழுது அதனைப் பேசுகின்ற ஹகீமை கிண்டல் செய்கின்றீர்கள். உங்களுக்கு என்னானது? அப்படித்தான் செய்யச் சொன்னார்களா தொழில் தந்தவர்கள்?
ReplyDeleteYes I still feel that the mosques in Sri Lanka are under threat. But Hakeem is not the right person to speak against it in public rallies because he has never opened his mouth in the presence of the president. He knows if he protested against it, he would be compelled to resign from his post.
ReplyDelete