அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து விரைவில் முக்கிய தீர்மானம்
PP
மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை யூட்சனை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு வழங்கிய அறிக்கையிலேயே றிசாத் பதியுதீன் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஆரம்பக்கட்ட அறிக்கையில், மன்னார் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது மற்றும் நீதிவானை அச்சுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதையடுத்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டவாளர்கள் சிறிலங்கா காவல்துறை அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
வீடியோ மற்றும் கண் கண்ட சாட்சிகள் இருந்தும் பொதுமக்களை சுடும்படி உத்தரவிட்ட மன்னார் அநீதிபதிக்கேதிராக எந்த முறைப்படோ, விசாரணையோ இதுவரை உத்தரவிடப்படாதது ஏன்?
ReplyDelete