Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ரோஹித விண்வெளிக்கு செல்வாரா..?

உதயன்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

அதன்படி இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியல் துறையில் படிப்பினை முடித்த ரோஹித அண்மையில் பட்டத்தினைப் பெற்றார். பட்டமளிப்பு விழாவிற்கு ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருந்தார்.

தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரஷ்ய அதிபருக்கும் மகிந்தவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது. அதற்கமைய ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து ரோஹித ராஜபக்ச விரைவில் ரஷியா செல்ல இருக்கிறார். இதற்காக பெருந்தொகையான பணத்தை ராஜபக்ச ரஷ்யாவுக்குக் வழங்கிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தை இலங்கை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்து ராஜபக்சவை விளாசத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் விலைவாசி விண்ணை முட்டி நிற்கையில் ராஜபக்சவின் மகனுக்கு விண்வெளி பயணம் ஒரு கேடா? என்றும் அந்த கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ரஷ்யாவிடம் மகனுக்கு விண்வெளிப் பயணம், சீனாவிடம் குடும்பத்துக்கு விமான நிலையம்.
    இங்கே விடிந்தால் இரண்டாயிரம் ரூபா தாளை மாற்றினால் அந்தி படும்போது சல்லிக் காசு கையில் இல்லை.
    இன்னும் எத்தனை காலம்தான்.....?

    ReplyDelete
  2. தான் வியர்வை சிந்தி கஷ்டப் பட்டு உழைக்காமல், கோடி கோடியாக யாருடையதோ பணம் ஓசியில் கிடைக்கும் பொழுது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பணத்தை கழுவி கோடியில் காயப்போடக் கூட முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.