மியன்மாரில் மீண்டும் கலவரம்
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ந்த மேற்கு மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. புதிய தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், பெரும்பான்மை பெளத்தர்களுக்கும் இடையே மோதல் நடந்ததாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களா? என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
நிலைமைகள் வழக்கமான நிலையில் இருப்பதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கொடிய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட சூழல் குறித்து உலக சமூகம் கவலை அடைந்துள்ள சூழலில் மீண்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
ரோஹிங்கியா கூட்டுப் படுகொலைகளை குறித்து சுதந்திர விசாரணை நடைபெற வேண்டுமென நேற்று முன்தினம் ஐ.நா தூதர் தாமஸ் ஓஜியாக் விண்டானோ கோரிக்கை விடுத்திருந்தார்.
Post a Comment