அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் இரண்டு அடி
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவிலான அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் மிக நீளமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணசபைக்கு வரும் செப்ரெம்பர் 8ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி முடிந்துள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் இரண்டு அடி 4 அங்குல நீளம் ( 28 அங்குலம்) கொண்டதாக அச்சிடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்துக்கான வாக்குச் சீட்டுகள் இவற்றை விட இரண்டு அங்குல நீளம் குறைவானவையாகும்.
அம்பாறையில் 16 அரசியல் கட்சிகளும், 18 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மட்டக்களப்பில், 16 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. pp
திகாமடுல்லவின் வாக்குச் சீட்டு வழக்கம் போல ”மிக நீளமானது” என்ற சாதனையை இம்முறையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆகவே தேர்தல் முடிவுகளும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் விஷேட ஒளி, ஒலி பரப்புக்களில் அறிவிக்கப்படாமல் வழக்கம் போல் பகல் பன்னிரெண்டே முக்கால் செய்தி அறிக்கையின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாலம். அம்பாறைக் கச்சேரிக்குள் அவ்வளவு வேலை இருக்கின்றது.
ReplyDelete