பழமைவாத முஸ்லிம்களை ஒழித்துக்கட்டப் போகிறார்களாம்..!
ஆப்ரிக்க நாடான மாலியில், பழமைவாத முஸ்லிம்களை விரட்ட, இளைஞர்கள் குழு, போர் பயிற்சி பெற்று வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள பெரிய நாடுகளில் மாலியும் ஒன்று. இந்நாட்டில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனத்தில் அடங்கியுள்ளன. இந்த நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு அதிபரை கவிழ்க்கும் வேலைகள் அடிக்கடி நடக்கின்றன.
ராணுவத்துக்குள் கோஷ்டி நிலவுவதால், இந்நாட்டின் பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள திம்புக்டு நகரம், முஸ்லிம் பழமைவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. அல்-குவைதாகளும் இந்த பகுதியில் ஊடுருவி, அரசு படைகளுக்கு எதிராக பல நேரங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
திம்புக்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பழமைவாத முஸ்லிம்களின் அடக்குமுறையை பொறுக்க முடியாத இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து, மாஜி ராணுவ அதிகாரி தலைமையில் போர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
"எங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக இருந்ததில்லை. எங்கிருந்தோ வந்தவர்கள் இது போன்ற விதிமுறைகளை திணித்து எங்களை பாடாய்படுத்துகின்றனர்' எனக் கொதிக்கின்றனர், மாலியின் வடக்கு பகுதியில் உள்ள இளைஞர்கள். எனவே, "இங்குள்ள பழமைவாத முஸ்லிம்களை ஒழித்துக் கட்டவே, தற்போது போர் பயிற்சி பெற்று வருகிறோம்' என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment