Header Ads



தலைமுடிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கு தொடர்பு - கனடா ஆய்வில் தகவல்

 
முடியின் ஆரோக்கியத்தை வைத்து மனஉளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு.
 
தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
 
இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது. இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது. ஆய்வு விவரங்கள் குறித்து கிடியான் மேலும் கூறியதாவது,
 
மன உளைச்சலுக்கு கார்டிசால் ஹார்மோன் சுரப்பு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகரித்தால், அட்ரீனல் சுரப்பியில் கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இன்சுலினின் செயலுக்கு எதிராக செயல்படும் குணம் கொண்டது கார்டிசால். இதன் அளவு அதிகமானால், குளுக்கனோஜெனிசிஸ் வினை காரணமாக  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து கார்டிசால் அதிகம் சுரந்தால் `பல்வேறு பாதிப்புகளை ஏற்படும். தலைமுடி சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு செ.மீ. நீளம் வளர்கிறது. 1 செ.மீ. நீள தலைமுடியை ஆய்வு செய்து, அதில் கார்டிசால் அளவை கணக்கிட்டால் ஒரு மாத காலத்தில் மனஉளைச்சல் பற்றி தெரிந்துகொள்ளலாம். 6 மாத காலத்துக்கு மனஉளைச்சல் நிலவரத்தை தெரிந்துகொள்ள 6 செ.மீ. நீள தலைமுடி போதும். மேலும், கார்டிசால் அளவைக் கொண்டு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு கிடியான் கூறினார்

No comments

Powered by Blogger.