கிளிநொச்சியில் இளைஞர் பாராளுமன்றம்..!
இளைஞர் நாடாளுமன்றக் கட்டடத்தை கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார். முன்னர் இளைஞர் நாடாளுமன்றத்தை அனுராதபுரவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
வடக்கில் தற்போது நிலவும் அமைதிச் சூழலைக் கருத்தில் கொண்டு இதனை கிளிநொச்சியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நாடாளுமன்றத்தின் கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படும்.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நாடாளுமன்றம் 335 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இதில் 332 உறுப்பினர்கள் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மூவர் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிறிலங்காவின் இளைஞர் விவகார அமைச்சின் செயலரினால் நியமிக்கப்படுகின்றனர்.
Post a Comment