மியன்மார் முஸ்லிம்களை தாக்கி, பாலியல் வன்முறை
பர்மாவில் மத வன்முறைகளைத் தொடர்ந்து பர்மிய அதிகாரிகள் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
மேற்கு பர்மாவில் றொடிங்யா முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே ஜூன் மாதத்தில் வன்செயல்கள் மூண்டபோது இராணுவமும், பொலிஸாரும் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது.
அதன் பிறகு பாதுகாப்புப் படையினர் முஸ்லிம்களை இலக்கு வைத்து அவர்களை தாக்கி, பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, வகைதொகையின்றி கைது செய்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அந்தப் பகுதிக்கு உதவிப் பணியாளர்களும், செய்தியாளர்களும் போவதை பர்மிய அதிகாரிகள் தடுத்ததாகவும் அது கூறுகின்றது. பர்மாவிலும், அருகே வங்கதேசத்திலும் பலரை செவ்வி கண்டு அந்த அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. bbc
Post a Comment