Header Ads



''நோன்புக் கஞ்சிக்குள் மிதக்கும் அரசியல்'' (படங்களுடன் விளக்கம்)

தம்பி

அமைதியாகச் சென்று கொண்டிருந்த கிழக்கு மாகாணத் தேர்தல் பிரசாரக் களமானது, திடீரென கல்லெறி, அடிபிடி, தீவைப்பு என்று விஜயகாந்த் திரைப்படம் மாதிரி மாறியிருக்கிறது. அதுவும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை என்கிற இரண்டு முஸ்லிம் ஊர்களில் - புனிதமான நோன்பு காலத்தில் இந்தக் களேபரம் இடம்பெற்றிருப்பதுதான் வெட்கத்துக்குரிய விடயமாகும்!

திறந்து சொன்னால், அக்கரைப்பற்றுக்கு இதுவொன்றும் புதிய விடயமல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பும் இது போலானதொரு வெட்கப்படும் விடயம் அந்த மண்ணில் நடந்தேறியது. 2009 ஆம் ஆண்டு, அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் (நோன்பு துறக்கும் நிகழ்வு) கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், மு.கா. ஆதரவாளர்களும் அமைச்சர் அதாஉல்லாவின் ஆட்களால், நிகழ்வு நடக்கும் இடத்துக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டமையும், அதனால் - ஹக்கீமும், ஆதரவாளர்களும் நடு வீதியில் அமர்ந்து நோன்பு துறந்தமையும் நாம் அறிந்த கதைகள்தான்!

சரியாக 03 வருடங்களுக்குப் பிறகு அதே கதை, அதே மண்ணில் அரங்கேறியிருக்கிறது!

அக்கரைப்பற்று மு.காங்கிரஸ்காரர்களால் கடந்த திங்கள் கிழமையன்று அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியிலுள்ள ஒரு திறந்த வளவில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் உட்பட அம்பாறை மாவட்டத்திலுள்ள சுமார் 03 ஆயிரம் பேர் கலந்து கொள்வதற்கான ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.



இதை அறிந்து கொண்ட ஒரு கூட்டத்தார், இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு அன்றைய தினம் காலை 10 மணியளவில் சென்றனர். நிகழ்வு ஏற்பாடுகளைக் குழப்புவதற்கு முயற்சித்தனர். கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த பொருட்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தினர். இவற்றையெல்லாம் செய்தவர்கள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆட்கள்தான் என்கிறார்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்த மு.காங்கிரஸ்காரர்கள்.

ஆனாலும், இந்தக் கலவரங்களையெல்லாம் சமாளித்துக் கொண்டு, இப்தார் நிகழ்வுக்கான ஆயத்தங்களை மு.காங்கிரஸார் செய்து முடித்தார்கள்.

இப்போது நேரம் மாலை சுமார் 5.30 மணி. அக்கரைப்பற்றில் ஏற்பாடாகியிருந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பலர் அட்டாளைச்சேனையினூடாக அக்கரைப்பற்று நோக்கி தமது வாகனங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வேளை – அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸின் வெற்றிலைச் சின்ன வேட்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலயம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மு.கா. தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் வாகனங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்படுகின்றன. இதனால் மு.காங்கிரஸ் தலைவரின் வாகனம், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளரும், வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர், மு.கா. வேட்பாளர்கள் ஜப்பார் அலி, நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த நாஸர் ஹாஜி மற்றும் நீதியமைச்சின் இணைப்பாளர் ரகுமத் மன்சூர் ஆகியோரின் வாகனங்கள்; சேதமடைகின்றன. நாஸர் ஹாஜியின் முகம், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் காயம் வேறு!


இந்தச் சம்பவத்தில் தமது வாகனங்கள் மீது கல்களை வீசி, தம்மைத் தாக்கியவர்கள் அமைச்சர் உதுமாலெப்பையின் ஆட்கள்தான் என்பது மு.காங்கிரஸாரின் குற்றச்சாட்டாகும்.

நேரம் மாலை 6.00 மணியாகிறது. மு.காங்கிரஸ்காரர்களால் அக்கரைப்பற்றில் இப்தார் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடத்துக்குச் செல்லும் வீதி முழுக்க அந்த நிகழ்வுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஒரு பெரிய கூட்டம் திரண்டு நிற்கிறது. பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் மு.காங்கிரசின் முக்கியஸ்தர்கள் எவரும் நிகழ்வு இடம்பெறும் இடத்துக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பொலிஸாரும் மு.கா. முக்கியஸ்தர்களை நிகழ்வு நடக்கும் இடத்துக்குப் போக வேண்டாம் எனக் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இதன்போது, மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அக்கரைப்பற்று மு.கா. அமைப்பாளரும் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைருவமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி மற்றும் மு.கா.வின் வேட்பாளர்கள் சிலர் - இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள். தமது நிகழ்வினைக் குழப்பிக் கொண்டிருக்கும் கூட்டத்தார் அப்படியே நின்று கொண்டிருக்க, நிகழ்வுக்கு அழைக்கப்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தமையானது ஏற்பாளர்களுக்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் கோபத்தோடு வருகிறார், அங்கு நின்றிருந்த அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகலவிடம் கடும் தொனியில் பேசுகிறார். போலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார். ஆனாலும், நிலைமையில் மாற்றங்களில்லை!


இது இப்படியிருக்க, அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனது பயணத்தின் இடைவழியிலுள்ள அட்டாளைச்சேனையில் தனது வாகனத்தை நிறுத்துகின்றார். அங்கு திரண்டிருந்த கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசுகின்றார். அப்போது, அக்கரைப்பற்றின் களநிலைவரம் மு.கா. தலைவருக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. ஆனாலும், எப்படியோ குறித்த இப்தார் நிகழ்வுக்கு சென்றேயாக வேண்டும் என்று மு.காங்கிரஸ் ஆதரவாளர்களில் ஒரு கூட்டத்தார் ஹக்கீமை வலியுறுத்துகின்றனர். ஆனால், வேறுபலர் அக்கரைப்பற்றுக்குச் செல்வதால் வீண் பிரச்சினைகள்தான் ஏற்படும் என்றும், இந்த நோன்பு காலத்தில் அதைத் தவிர்ப்பதே நல்லது என்றும் கூறுகின்றனர். இரண்டு தரப்பாரோடும் ஹக்கீம் பேசுகின்றார்.

இப்தார் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அக்கரைப்பற்றுக்கு ஹக்கீம் செல்வதில்லை என முடிவாகிறது. அட்டாளைச்சேனையில் நின்றிருந்த மு.கா. தலைவர் ஹக்கீமை அங்கிருந்த ஆதரவாளர்கள் அருகிலிருந்த அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். அங்கே - ஹக்கீம் உட்பட அனைவரும் நோன்பைத் துறக்கின்றனர்.

இதேவேளை, அக்கரைப்பற்றில் ஏற்பாடாகியிருந்த இப்தார் நிகழ்வில் அத்தனை பிரச்சினைகளையும் கடந்து மு.காங்கிரசைச் சேர்ந்த சில நூறு பேர் கலந்து கொள்கின்றனர். ஏனையோர் வீதிகளில் அமர்ந்தவாறும், அருகிலுள்ள ஹோட்டேல்களுக்குச் சென்றும் நோன்பைத் துறந்தனர்.

இவைகளின் இடையே, அக்கரைப்பற்று இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்த மு.கா. ஆதரவாளர்கள் சிலர் - அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்றில் வைத்து ஒரு கூட்டத்தாரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். பின்னர் காயங்களோடு அவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


நோன்பு துறந்து முடிகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமை அட்டாளைச்சேனையிலிருந்து ஆதரவாளர்கள் வழியனுப்பி வைக்கின்றனர்.
நேரம் இரவு 7.00 மணி இருக்கும். அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் அமைந்திருக்கும் அமைச்சர் அதாஉல்லாவின் வெற்றிலைச் சின்ன வேட்பாளர் உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலங்களை நோக்கி மிகப் பெரும் கூட்டமொன்று திரண்டு வந்தது. நடக்கக் கூடாதது ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது! வந்த கூட்டத்தினர் வேட்பாளர் உதுமாலெப்பையின் இரண்டு காரியாலயங்களுக்குள்ளும் புகுந்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினார்கள். போதாக்குறைக்கு – அலுவலகமொன்றுக்கு தீ வைத்தனர்.


இந்தக் கலவரம் குறித்து அக்கரைப்பற்றுப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் வந்திருந்தபோதும் சில நிமிடங்கள் பொலிஸாரினாலேயே நிலைமைய அடக்க முடியவில்லை. பிறகு விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டனர். கலகத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினார்கள். ஆனாலும், அலுவலகத்துக்குள் புகுந்தவர்கள் அனைத்து அட்டூழியங்களையும் புரிந்து விட்டே திரும்பியிருந்தனர்.

இதன் பிறகு, தமது காரியாலயம், அங்கிருந்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றவர்கள் மு.காங்கிரஸ்காரர்கள்தான் என்று வேட்பாளர் உதுமாலெப்பை தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தமது காரியாலயம் தாக்கப்பட்டமை குறித்து அவர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.


இவைதான் கடந்த திங்களன்று அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற கூத்துக்கள்!

இதற்குப் பிறகு இரண்டு பகிடிகள் நிகழ்ந்தன.   
                                  
பகிடி – 01: 'அட்டாளைச்சேனையில் வேட்பாளர் உதுமாலெப்பையின் அலுவலகத் தாக்குதலுக்கும், மு.கா.காரர்களுக்கும் தொடர்பெதுவும் இல்லை. உதுமாலெப்பையின் ஆட்களே அவர்களின் அலுவலகத்தினை சேதப்படுத்தி விட்டு, அந்தப் பழியை மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது சுமத்துகின்றனர்' என்று சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மு.கா. தலைவர் ஹக்கீம் கூறியது முதல் பகிடியாகும்!

பகிடி – 02: 'அக்கரைப்பறில் நோன்பு துறப்பதற்கு எவருக்கும் தடையில்லை. இனவாதத்தைப் பேசி, நாட்டுக்கும் சமூகத்துக்கும் களங்கத்தினை ஏற்படுத்தும் ஹக்கீமையே நாம் எதிர்த்தோம். குறித்த இப்தார் நிகழ்வை பேரணியாகச் சென்று எதிர்த்தவர்கள் மக்கள்தான். அதில் தேசிய காங்கிரஸ்காரர்கள் எவரும் ஈடுபடவில்லை' - இது அக்கரைப்பற்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் அதாஉல்லா தெரிவித்த மற்றொரு பகிடியாகும்.

இந்த இரண்டு பகிடிகளையும் படித்து விட்டு, நாம் விழுந்து – விழுந்து சிரிப்பதா? இல்லை நமது தலையை நாமே எங்காவது முட்டிக் கொள்வதா என்று - என்னைப் போலவே நீங்களும் எண்ணக் கூடும்!

அமைச்சர் அதாஉல்லாவின் மேற்படி கூற்று பகிடியாக மட்டுமன்றி விநோதமாகவும் உள்ளது. குறித்த இப்தார் நிகழ்வினை குழப்பும் நடவடிக்கையில் - அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்களே பகிரங்கமாகக் கலந்து கொண்டார்கள். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் ஊடகங்களிடம் உள்ளன. உதாரணமாக, மு.காங்கிரசின் அமைப்பாளராக இருந்து அண்மையில் அமைச்சர் அதாஉல்லாவோடு இணைந்து கொண்ட, தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளர் யூ.எல். உவைஸ் என்பவர் மு.காங்கிரஸாரின் இப்தார் நிகழ்வினைக் குழப்பிய கூட்டத்தில் காணப்பட்டார். அங்கு நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தினை வழி நடத்தியவர்களில் உவைசும் ஒருவர் என்பதை பலரும் அறிவார்கள். அப்படியென்றால், குறித்த ஆர்ப்பாட்டங்களில் தேசிய காங்கிரசார் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் அதாஉல்லா சொல்வது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது, தேசிய காங்கிரசிலிருந்து ஏற்கனவே, உவைஸ் விலக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது விலகியிருக்க வேண்டும். இதில் எது உண்மை? எது பொய்?

அடுத்தது, மு.கா. தலைவர் ஹக்கீம் இனவாதம் பேசுவதாகவே வைத்துக் கொள்வோம். அதற்காக, ஹக்கீமை அக்கரைப்பற்றுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் அதிகாரத்தினை அமைச்சர் அதாஉல்லாவுக்கு வழங்கியது யார்?

அதாஉல்லா கூறுவது போல், ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு வருவதை தேசிய காங்கிரஸ்காரர்கள் தடுக்கவில்லை, மக்கள்தான் தடுத்தார்கள் என்றால் - இதற்கு, அக்கரைப்பற்று மக்களின் பதில்தான் என்ன?

கடைசியாக இன்னொரு கேள்வி, குறித்த இப்தார் நிகழ்வினை குழப்பியவர்கள் மக்கள்தான் என்றும் அதில் தேசிய காங்கிரஸ்காரர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும் அமைச்சர் அதாஉல்லா கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தேசிய காங்கிரசுக்கு ஆதரவற்ற ஒரு பெரும் மக்கள் தொகையினர் அக்கரைப்பற்றில் இருப்பதை அமைச்சர் அதாஉல்லா ஒத்துக் கொள்வது போல் தெரிகிறதே... அப்படியா?

எது எவ்வாறாயினும், அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ்காரர்களும், மு.காங்கிரஸ்காரர்களும் கிழக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு, ஊர் ஊராக நோன்பு துறக்கும் நிகழ்வுகளை நடத்தி வருவதை அடிக்கடி காண முடிகிறது. ஆனால், இவை இப்தார் நிகழ்வு என்கிற முகமூடிகளுடன் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகள்தான் என்பதை சிறு குழந்தையும் அறியும். இந்த இரண்டு அரசியல் கட்சிக்காரர்களும் புனித நோன்பு எனும் மார்க்கக் கடமையினை தங்கள் அரசியலுக்குள் போட்டுக் குழப்புகின்றனர். இப்தார் நிகழ்வுக்காக இவர்கள் வழங்குகின்ற நோன்புக் கஞ்சியில் அரசியல்தான் மிதக்கிறது!

ஆனாலும், எந்த முகமூடியினை அணிந்து கொண்டு வந்தாலும், நோன்புக்கும் - நோன்பாளிக்குமான சங்கையினை வழங்க வேண்டியது சக முஸ்லிம் சகோதரர்களின் கடமையாகும்.

'நோன்பு பாவங்களிலிருந்து தடுக்கும் கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம். கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால், அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும்!' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தேசிய காங்கிரஸ்காரர்களே.... மு.காங்கிரஸ்காரர்களே...! கடந்த திங்களன்று நீங்கள் நோன்பு நோற்கவேயில்லையா? அல்லது நமது இறைத்தூதரின் கட்டளைகள் பற்றி நீங்கள் எண்ணிப் பார்க்கவில்லையா?

நோன்புப் பெருநாள் தினத்திலாவது – அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனையில் நிகழ்ந்த அசிங்கங்களுக்காக இறைவனிடமும், உங்களால் பாதிக்கப்பட்ட சகோதரர்களிடமும் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்!

உங்களுக்கு - எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
· 

 
   

9 comments:

  1. வாசித்து விட்டுக் கவலைப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  2. i am really appreciated the writer. Both parties are useless but SLMC little bit ok When compare with other party. Let see insa Allah. Allah knows best.

    ReplyDelete
  3. கட்டுரயை எலுதியவருக்கு, நன்ரி,
    இதில் இருதியாக நேன்கல் முன்வைத்த நபிகலின் ஹதிஷ் சொல்வது சன்டைக்காரன் வந்தால் நான் நோன்பாலி என்ரு சொல்வதுதான் ஆஹ சிரந்தது.இது ஹனேப மொஉலவி முதலில் தவர விட்ட குட்ரம், இரன்டாவது குடட்ரம் பிரஷ்ஷினை தெரிந்தும் ஹகிம் வலிந்து சன்டைக்குப் போனதும் மருமயில் முதலில் இப்பிரஷ்ஷினைக்கு அல்லஹ்விடம் பதில் கூரவென்டும் ஹனேப மொஉலவியும்,ஹகிமும்.முஷ்லிம் கான்கிரசஷ் போரலிகலும்தான்.

    ReplyDelete
  4. கட்டுரயை எலுதியவருக்கு, நன்ரி,
    இதில் இருதியாக நேன்கல் முன்வைத்த நபிகலின் ஹதிஷ் சொல்வது சன்டைக்காரன் வந்தால் நான் நோன்பாலி என்ரு சொல்வதுதான் ஆஹ சிரந்தது.இது ஹனேப மொஉலவி முதலில் தவர விட்ட குட்ரம், இரன்டாவது குடட்ரம் பிரஷ்ஷினை தெரிந்தும் ஹகிம் வலிந்து சன்டைக்குப் போனதும் மருமயில் முதலில் இப்பிரஷ்ஷினைக்கு அல்லஹ்விடம் பதில் கூரவென்டும் ஹனேப மொஉலவியும்,ஹகிமும்.முஷ்லிம் கான்கிரசஷ் போரலிகலும்தான்.

    ReplyDelete
  5. katturaiyai eluthiya thambi neengal enge nintru ithai partheergal.setlite moolamakava. akkaraipattril iftharil kalanthu kondathu verum 20 perkal mattumthan.athil faizal kaseem mp yin pathukappu veerarkal 4 pear poka meethi 15 pear thaan akkaraipattu aatkal.sari irunthu 8 m thikathi akkaraipattu vakkalippai paarungalean vilangium.Athaulla meethu mattum sara maariyaaka pukaar sollum neengal maydaikku oru peachcu pesum hakeem avairkalin maaya valaiyil innuma neengal. .......

    ReplyDelete
  6. முஸ்லிம் காவாலி அரசியல் வாதிகள் , கஞ்சிக்கு சண்டை போடும் கூட்டம் . இவ்வாறன சண்டைகள் தமிழ் கட்சிகளில் நடப்பதாக ஒரு செய்தியும் வரக் காணோம்

    நோன்பு திறந்த வர்கள் (முஸ்லிம் காங்கிரஸ் காரனுகள் )ஒருவரும் மக்ரிப் தொழுகைக்கு போக வில்லை , அதுதான் மூன்றாவது பகிடி

    ReplyDelete
  7. தம்பி அப்துல் மஜீத்,
    றணகல உங்களுடன் இருக்கின்றார் என்ற தைரியமாக்கும்.
    அதாஉல்லாவுக்கு ஆப்பு அக்கரைப்பற்றில் இல்லை அம்பாறையில் அடித்தாகிவிட்டது.
    கடந்த பொதுத் தேர்தலில் அதாஉல்லா ”நிபந்தனையுடன் வகுப்பேற்றப்பட்டார்” என்பதனை அக்கரைப்பற்று அறியும்.
    அம்பாறைக் கச்சேரியில் வீரசேகரவிடம் இடிவாங்கியதையும், ஹரீஸ் காப்பாற்றி விட்டதையும் அதாஉல்லா மறந்திருக்கமாட்டார். கேட்டுப்பாருங்கள்.

    ReplyDelete
  8. எல்லாம் சரி அப்துல் முஹம்மத் அவர்களே, தேசிய காங்கிரஸ்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை என்று அதாஉல்லா சொல்லியிருப்பதனையும், ஊடகங்கள் வெளியிட்டுள்ள படங்கள் பற்றியும் ஒன்றும் சொல்லவில்லையே!
    ஒரு வேளை photoshop இல் கைதேர்ந்த பத்திரிகைக் காரர்களது வேலையாக இருக்குமோ?

    ReplyDelete
  9. இவர்கள் எல்லோரும் பிணம் தின்னிக் கழுகுகள். அதற்கு மாட்டிக்கொண்டது அல்லாஹ்வையும், அவன் தூதரையும் மறந்த நமது சமுதாயம். நம்மைக் காப்பாத்த இவர்கள் தேவயில்லை.. இறையச்சம் இருந்தால் போதும்... ஆனால் நாம்!!

    ReplyDelete

Powered by Blogger.