Header Ads



முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - இனவெறியன் நரேந்திர மோடி (வீடியோ)

குஜராத்தில் கடந்த 2002-ல் நடைபெற்ற கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது,

ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்திருந்தால்தான் அவரை மன்னிப்பு கேட்கும்படிக் கோர முடியும். அது மிகப்பெரிய குற்றம் என்று நீங்கள் கருதினால், அதை இழைத்த குற்றவாளியை ஏன் மன்னிக்க வேண்டும்? மோடி முதல்வர் என்பதாலேயே அவரை ஏன் மன்னிக்க வேண்டும்? மோடி குற்றவாளி என்றால் அவர் மிகப்பெரிய தண்டனையைப் பெற வேண்டும். அது போன்ற அரசியல் தலைவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதை இந்த உலகம் அறிய வேண்டும். எதிர்காலத்தில் பிரதமர் பொறுப்பை ஏற்பது குறித்துக் கேட்கிறீர்கள். நான் குஜராத் மீதே கவனம் செலுத்தி வருகிறேன். அதைத் தாண்டி என்னால் சிந்திக்க முடியாது என்று மோடி தெரிவித்தார்.

..............................................................................................

ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு காரணம் பெண்கள் தங்கள் அழகைக் குறித்து கவலைப்பட்டு உடலை வருத்திக் கொள்வதால் உருவாகிறது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கூறிய முட்டாள் தனமான கருத்திற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் வறுமையின் காரணமாக, குழந்தைகள் உள்பட ஏழை எளிய மக்கள் ஊட்டச் சத்துக் குறைவினால் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மரணங்களும் நிகழ்கின்றன. பொதுவாகவே ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டுமென்றே வரவேற்க மாட்டார்கள். இது பள்ளிக்கூட சிறுவனுக்கு கூட தெரிந்த விஷயம். ஆனால், சங்க்பரிவாரத்தின் அரசியல் பிரிவான பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் பதவிக்காக கனவு காணும் நரேந்திர மோடியின் குழம்பிப் போன மூளைக்கு இது கூட தெரியாதது ஆச்சரியமில்லை. ஏனெனில் மூளையை மொத்தமாக மதவெறிக்கு குத்தகைக்கு விட்டுள்ள மோடிக்கு இம்மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே.
 
மோடியின் கூறுகெட்ட பேட்டியை பாருங்கள்:
 
குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் சைவ உணவு சாப்பிடுவோர் இருக்கிறார்கள். மேலும், இங்கு நடுத்தர வகுப்பு மக்களும் அதிகம் உள்ளனர். நடுத்தர வகுப்பு மக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை விட அழகுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இது சவாலானது. ஒரு தாய், தனது மகளிடம் பால் சாப்பிடு என்றால் அங்கே பெரிய சண்டையே வெடிக்கிறது. பால் சாப்பிட்டால் எனது உடல் பெருத்து விடும், கொழுப்பு கூடி விடும், குண்டாகி விடுவேன் என்று பெரும்பாலான டீன் ஏஜ், இளம் பெண்கள் கூறுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.
 
மோடியின் முட்டாள் தனமான கருத்துக்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
 
சல்மான் குர்ஷித்

“இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு தெரியாமல் போனது வருத்தமானது.” என்றார்.
 
மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால்: “ஜிடிபி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை” என்றார்.
 
மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ்: “மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது” என்றார்.
 
இதேபோல டிவிட்டரிலும் பலர் மோடியைக் கண்டித்து பேசி வருகின்றனர்.
 
இதுக்குறித்து, சாந்தனு என்பவர் கூறுகையில்; “ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டும் என்றே வரவேற்க மாட்டார்கள் என்பதை சாதாரணவர்கள் கூட புரிந்துகொள்ள முடியும். மோடிக்குப் புரியாமல் போனது ஆச்சரியம்தான்” என்று கூறியுள்ளார்.

 

3 comments:

  1. Narakathin Modeeyeh..
    Palutha Thadeeyeh........
    Nee oru Kedee......
    Marumail vadee....
    Unakku irukkuthu Kodee Pampukalin Kadee…

    ReplyDelete
  2. Narakathin Modeeyeh..
    Palutha Thadeeyeh
    Nee oru Kedee
    Marumail vadee
    unakku irukkuthu Kodee
    pampoo kadee…

    ReplyDelete
  3. ivanellam eppo prime minister aahap poran....pannaada...

    ReplyDelete

Powered by Blogger.