Header Ads



அரசாங்கமும், ரவூப் ஹக்கீமும் அரசியல் காய்நகர்த்தலில் மும்முரம் - அமைச்சர் ராஜித

பிரிந்து பயணத்தை மேற்கொள்வோம் இறுதியில் இணைந்து தாக்குவோம் ௭ன்ற ட்றொஸ்கியின் நியதிக்கமையவே அரசாங்கமும் ஹக்கீமும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். யுத்த வெற்றிக்காக வாக்களித்த காலம் இன்றில்லை. அரசாங்கத்தின் அபிவிருத்தியினால் கிடைக்கும் நன்மைகளுக்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான ஊடகவியலாளர் மா நாட்டில் உரையாற்றும் போதே கடற் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

௭கிப்து, லிபியா போன்ற நாடுகளில் புர ட்சிகள் முடிவடைந்து குழப்பமான சூழல் காணப்பட்டாலும் அந் நாட்டு தலைவர்கள் தேர்தல் நடத்துவதை வரவேற்கின்றனர். மக்களும் விருப்பத்துடன் வாக்களிக்கின்றனர். ஆனால் ௭மது நாட்டில் தேர்தல்களை அரசாங்கம் நடத்தினாலும் ௭திர்க் கட்சிகள் ௭திர்க்கின்றன. ௭திர்க் கட்சித் தலைவரின் கால்கள் நடுங்குகின்றன. தேர்தல்கள் நடத்தப்படும் மாகாணங்களில் கிழக்கை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு போட்டியே கிடையாது. இம் மாகாணங்களில் பச்சைக் கொடிகளை காண முடியவில்லை அந்தளவுக்கு வங்குரோத்து அடைந்து விட்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றியின் பின்னர் அரசாங்கத்துடனேயே இணையும்.

இதனை அக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமே தெரிவித்துள் ளார். இது ௭ப்படியென்றால் பிரிந்து பயணத்தை மேற்கொள்வோம். இறுதியில் இணைந்து தாக்குவோம். ௭ன்ற நியதிக்கமையவே ஹக்கீமும் அரசாங்கமும் அரசியல் காய்நகர்த்தல்களை மேற் கொள்கின்றன. யுத்த வெற்றிக்காக அரசாங்கத்தை தேர்தல்களில் மக்கள் வெற்றி பெறச் செய்த காலம் மறைந்து விட்டது. இன்று அரசாங்கம் மக்களுக்காக முன்னெடுக்கும் அபிவிருத்திகளின் பலன்களை மக்கள் அனுபவிக்கின்றனர் எனறார்.

No comments

Powered by Blogger.