சிரியாவில் உச்சக்கட்ட மோதல் - குவியல் குவியலாக ஜனாஸாக்கள்..!
சிரியாவில், கிளர்ச்சியாளர்களுடன் நடக்கும் தொடர் சண்டையால், தலைநகர் டமாஸ்கஸ் அருகே, நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு மார்ச் முதல் போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, அரசு படைகள் நடத்தும் தாக்குதலில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதிபர் ஆசாத்தை, பதவி விலகும்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
ஆனால், சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகள், சிரிய அதிபரை ஆதரிக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டின் மீது, முழு வீச்சில் பொருளாதார தடையை அமல்படுத்த முடியவில்லை. எனவே, கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுத உதவி செய்து வருகிறது. இதை தொடர்ந்து அந்நாட்டில், சண்டை தீவிரமடைந்துள்ளது.
பல நகரங்களை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதை மீண்டும் கைப்பற்ற, அரசு படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச பார்வையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள தராயா என்ற நகரில், ஒரே இடத்தில் 320க்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள காட்சியை, கிளர்ச்சியாளர்கள் இணைய தளங்களில் வெளியிட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் குவியல் குவியலாக காயமடைந்த சடலங்கள் கிடத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ராணுவத் தாக்குதலில் தான் இவ்வளவு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பார்வையாளர்கள், சிரிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திராயாவில் கொல்லப் பட்ட மக்களில் அதிகமானவர்கள், அவர்களின் வீடுகளில் வைத்து, கிட்ட இருந்தே சுட்டும், வெட்டியும் கொல்லப் பட்டுள்ளதாக BBC செய்திச் சேவை, போராளிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ReplyDeleteபெண்களையும், சிறுவர்களையும் அருகில் இருந்து வெட்டிக் கொல்லும் மோசமான செயல்களை ஹசன் நஸ்ருல்லாஹ்வின் ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாதிகள் முன்னர் ஒரு தடவை சிரியாவில் செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
idai ellaam seyravan UMNAIYAANA MUSLIMAAHA irukka mudiyumaa?
ReplyDeletela voix, did you mean மூன்றாவது நபராக ஷீயாக்கள் மறைமுகமாக இருக்க வாய்ப்புண்டா? இருக்கலாம் அங்கு நடப்பவற்றில் அநேகமானவை மர்மமாகவே உள்ளன. மேற்கத்தேய, இஸ்ரேல் நண்பர்களுக்கு உதவுகிறார்களோ! யோசிக்க வேண்டிய ஒன்று. ஒன்று மட்டும் நிச்சயம் இலங்கை உட்பட உலக முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய எதிரியாக ஷீயாக்கள் தொழிட்படுகிரார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உதவுகிறார்கள் முஸ்லிம் lable இல் இருந்து கொண்டு. முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள். அவர்களின் வீரப் பேச்சுக்களில் வீழ்ந்து விடாதீர்கள். அவை உங்களை அவர்களின் மாயைக்குள் விழ வைக்கும் யுக்தி.
ReplyDelete