ஈரானின் நின்று சிரியாவை எதிர்த்த மொஹமட் முர்ஸியின் துணிச்சல் (வீடியோ)
சிரியாவின் கொடுங்கோள் ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக செயற்படும் தார்மீக கடமை இருப்பதாக எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி அணிசேரா மாநாட்டில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
எனினும் இந்த உரையின்போது தெஹ்ரான் மாநாட்டில் பங்கேற்றுள்ள சிரிய தூதுக் குழு பாதியிலேயே வெளியேறிச் சென்றது.
‘சிரியாவின் கொடுங்கோள் அரசுக்கு எதிராக ஒன்றிணையும் தார்மீக பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. சிரியாவில் அவதியுறும் மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து ஆதரவளிக்க வேண்டும். அங்கு அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு நாம் ஆதரவளிக்க வேண்டும்’ என்றும் மொஹமட் முர்சி குறிப்பிட்டார்.
இதில் சிரியாவில் தாக்கத்தை செலுத்தக் கூடிய வெளிநாட்டு தலையீட்டுக்கும் முர்சி அழைப்பு விடுத்தார். சிரியாவில் தொடரும் இரத்த வெள்ளத்திற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். அங்கு தாக்கத்தை செலுத்தக்கூடிய தலையீட்டின் மூலமே இந்த இரத்த வெள்ளத்தை நிறுத்த முடியும்.
Post a Comment